பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 உங்கள் அனைத்தும் கோரஸ் பாடின. கூட்டாக ஒலித்த குரலைப் பிரிவினை செய்து பார்த்தால், அல்லது கேட் டால், மேகலை’ என்ற அழைப்பு தெரியும்; அல்லது கேட்கும் ! ஆம்; அவன் மாமல்லன்தான் ! எட்டிப் பிடிக்கும் தூரத்தில் சோமசுந்தரத்தின் மனை இருந்தது. ஒடிப் பிடிக்க வேண்டியவன் அவன்; அதற்கு உரிமையும் அவனுக்கு இருந்தது. அந்த உரிமை இப்போது காலாவதியான பத்திரம். அனும யின்றி உள்ளே பிரவேசிக்கக் கூடாது' என்ற எச்ச ரிக்கை அட்டை தொங்கவிடப்பட் டிருக்குமென்றுகூட அவன் யோசித்தான். சென்னையிலிருந்து புறப்பட்டவன் அரியலூர் மண்ணை மிதிக்குமட்டும் எவ்வளவோ மனத் தெம்புடன் இருந்தான்; விதியின் எழுத்துடன் தன் தலை யெழுத்தையும் மாற்றிக்கொள்ளும் அளவுக்குப் பக்கு வப்பட்டிருந்தது அவன் நெஞ்சம். காதற் பெண்ணின் கடைக்கண் பணியிலே காற்றிலேறி விண்ணையும் சாடும் திறன் அவனிடம் உருப்பெற்றது. நானும் என் மேகலை யும் மனம் ஒத்துப்போன பிறகு, ஒப்புதல் சொல்லாத ஜாதகங்களைப்பற்றி யாருக்கு அக்கறையாம்?...என்னு டைய முறைமைப் பெண் என்னைச் சாரவேண்டியவள் தானே ?...பின், ஏன் ஜாதகம் பார்க்க வேண்டும்?... காதும் காதும் வைத்தாற்போல திருமண ஏற்பாடுகளைக் கூடச் செய்து விட்டாரே மாமா?...பணம் அவருடைய வாயை கட்டிவிட்டது போலவே அவர் உன்ளத்தையும் கட்டிவிட்டதோ காதலெனும் தீவினிலே கண்டெடுத்த பெண்மணி ராதை யல்லவா என், மேகலை ! அவள் இல்லை யென்ருல், நான் எப்படி உயிர் தரிப்பேன் ...' என்று மனம் குழப்பம் அடைந்தது. மேகலையின் இல்லம் நெருங்க நெருங்க அவனுக்குப் பயமும் நெருங் கிக் கொண்டிருந்தது. கை நழுவிப்போன மரகதக் கல் மீண்டும் கிடைக்காதா என்ற ஆதங்கத்துடனும் திரும்ப வும் அது கிடைக்க வேண்டும்ே யென்ற வேண்டுதலை யுடனும் தேடிப் பார்த்து அலேயும் உடைமைக்காரனின் நிலையில் இருந்தான் மாமல்லன்.