பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5i மாட்டீர்களா? என் வாழ்வின் நிலையே நீங்கள் தானே, அத்தான் ! -மேகலை.: சிதைந்த மனத்திலிருந்து சித்த உறுதிகூட ஏற்பட முடியுமா? ஏன் முடியாது?-நஞ்சம் ஊறும் நெஞ்சத்தில் தானே அமுதிற்கும் வழி கிடைக்கிறது ! 'அக்கா, அக்கா! நீயும் இவங்களும் ஏன் அழ நீங்க?' என்ற வினுக்குறியுடன் விளுத் தெரியாச் சிறுமி: ஒருத்தி வந்தாள். மாமல்லனும் மேகலையும் கண்களை இணையாக்கிப் பார்த்துக் கொண்டார்கள். - தெருவிலேயே நின்னுக்கிட்டிருக்கோமே! வாங்க, உள்ளே !?? "மாமா இல்லியா, மேகலை?” "பட்டணத்திலே யிருந்து மாப்பிள்ளை காரிலே வர்ருங்களாம். அப்பா குளிச்சிட்டு வரப் போயிருக்காங்க, அப்படியே மங்காயி பிள்ளையார் கோயிலுக்குப் போயிட் டுத்தான் திரும்புவாங்க. - 'மாப்பிள்ளை' என்ற சொற்கள் திருமாறனின் உருவ அமைப்பை எழுதிக் காட்டின. அன்ருெரு நாள் தன்ன்ை அவன் சந்தித்ததை நினைவில் உணர்ந்தான். அவன் அரியலூருக்குப் போகப்போவதாக கூறிய செய்தி அவ னுக்கு இத்தகைய அர்த்தத்தைக் கற்பிக்கு மென்று மாமல்லன் தூங்கும்போதுகூட எண்ணியது கிடையாது. மரகதவல்லி அம்மை மாமல்லனக் கண்டதும் நிலைப் படியிலிருந்து விலகித் தலையை உள்ளே ம்றைத்துக் கொண்டாள் ; வாங்க!...” என்ற மெலிந்த தொனி உள்ளிருந்து வெளியேறியது. - 3. ஆ மேகலை காப்பி கொண்டு வந்நாள். கூடத்தில் பிற்ம்பு நாற்காலியில் அமர்ந்திருந்த மாமல்லனிடம் கொடுத்தாள். வேண்டுமென்றே தொட்டுக் கொடுக்க விரும்பியவள்போல கை விரல்கள் அவன் விரல்களுடன் இண்ையும் வண்ணம் காப்பி டபராவைத் தொட்டு நீட்டி