பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ளுள். கால் மாத்திரைப் பொழுது இருவரும் மெளனத் தைச் சாட்சி வைத்தார்கள். "இன்றைக்கு மட்டும் காப்பி கொடுத்து விட்டுத் தப்பித்துவிடப் பார்க்கிருயா, மேகலை ? என்ருன் அவன். 'இல்லை, இல்லை. அப்படி யெல்லாம் நீங்கள் உங்கள் வாயால் சொல்லாதீர்கள். என் கையாலேயே நித்த நித்தம் உங்களுக்குக் காப்பி கொடுப்பேன்! ஆமாம், அத்தான்!” என்று விடை பகர்ந்தாள். இள நகையையும் பகிர்ந்து கொடுத்தது இதழ் ஏடு. "உண்மையாகவா, மேகலை ? ஆலயமணி பதில் சொன்னதோ ? உணர்ச்சி சிறைப்படும் சமயத்தில் மனிதன் மனித ஞக நிலைத்து நிற்க வேண்டும். மேகலையின் மது சொட் டும் புது இதழ்களைக் கிள்ளிவிட ஒடிய வலது கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான் இளைஞன். குளிர் காய்ச்சலுக்கு ஆளானவன் போலானுன் உடல் குன்றி யது. தவறு செய்யவில்லை யென்ற நியாய உணர்ச்சி அவன் கண்களைத் திறந்தபோது, குன்றிய உடல் நிமிர்ந்தது. உள்ளம் குதுரகலம் அடைந்தது. மேகலை யைக் கூறு போட்டுச் சாப்பிட்டுவிட்டுத் தான் மறு வேலை பார்ப்பவனைப் போன்று அப்படி அவளை இமைக் காமல் பார்த்துக்கொண்டே யிருந்தான் மாமில்லன். இருவர் மூச்சின் இழைகளும் பின்னல் கோலாட்டம் விளையாடின. அப்போது, வாசலில் வந்து நின்ற கார் தன் வருகை யைத் தெரிவிக்கத் தொடங்கியது. * முதன் முதலில் மாமல்லன்தான் திரும்பிஞன். மரகதக் கல்லைத் திருடியவனைக் கையும் மெய்யும்ாகப் பிடித்துக் கொண்ட பொருளுக்கு உடையவன் திருடன் மீது ஆத்திரம் கொள்ளும் ரீதியில், மாமல்லன் அந்த உருவத்தைக் கனல் உதிர்க்கும் கண்களோடு பார்த் தான. வந்தவன் திருமாறன்.