பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஜெயங்கொண்ட சோழபுரம் பஸ் அடுத்த தெருத் திருப்பத்தில் ஊளையிட்டு மறைந்தது. மாமல்லன் கண்களை மூடி மூடித் திறந்தான். சிறிது பொழுதுக்கு முன் அவன் கண்ட கனவின் நினைவு உந்திக்கமலத்தில் தீக்கொழுந்தை வைத்தது. கொட்டு மேளம் முழங்க மேகலையின் கழுத்தில் திருமாறன் மூன்று முடிச்சுக்கள் இட்டதாகக் கனவு கண்டான் அவன். உச்சி தொட்டு உள்ளங்கால் முடிய நடுக்கம். ஆமாம், இன்றைக்கு இரவு மேகலையைத் திரும்பவும் தன்ரியே சந்தித்துத் தான் முடிவு செய்யவேண்டும்! என்று தீர்மானித்தான். எண்ணிய விசையுடன், யாரை யும் கவனிக்காமல் அங்கிருந்து நகர்ந்தபோது, வாசலில் தன் அன்னையும் சிந்தாமணியும் நிற்பதைக் கண்டான். ஒருவேளை அதுவும் கனவாக இருந்து தொலைக்கப் ப்ோகிறதென்ற ஆத்திரத்தில், கண்களைப் பரீட்சை செய்தான். அது உண்மைக் காட்சிதான் என்பதற்கு அத்தாட்சி கிடைத்தது. - 'தம்பி, உன்னைக் கண்டதுந்தான் என் மனசு நிம்மதிப்பட்டது. சொல்லாமல் கொள்ளாமல் இப்பிடிப் புறப்பட்டு வந்திடலாமா? சிந்தர்மணி ஆறுதல் சொல் லிச்சி, நீ இங்கேதான் வந்திருக்க வேணும்னு. என்ருள் கோசலை அம்மாள். கண்ணிரின் கறை விழி விளிம்பு களில் இல்லை; தொனியில் இருந்தது. 'அம்மா, மேகலை எனக்கு இல்லையாமே அம்மா ? கல்யாணத்துக்குத் தேதி வச்சு, பத்திரிகைகூட அடிச் சிட்டாங்களே அம்மா ?” . 'உன் மனசு உடைஞ்சிடுமேன்னுதான் நமக்கு வந்த கல்யாணப் பத்திரிகையை முன்னுடியே உன் கிட்டே காட்டல்லே !...” சுற்று மதிற் சுவர் ஓரமாக மேகலை நடந்து வாச லுக்கு வருவதை அறிந்தான் மாமல்லன். . 'அத்தை !’ என்று விம்மினுள் மேகலை.