பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அமைந்து விடுகிருர்கள். மனிதனுக்கும் ஆண்டவனுக் கும் இடைவெளியிலே தொலைதுாரம் பிர்ப்பளவைச் சொல்லுகிறது; கற்பனைக்கும் எட்டாத மாயப் பெரு வெளி திரையாக அமைகிறது. விதி, மாயை, இயற்கை, தெய்வம், ஜாதகம், தலையெழுத்து போன்ற அழகான சொற்கள் கோணத்துக்குக் கோணம் மறைந்து நின்று குரல் கொடுக்கின்றன. அவரவர்களுக்குப் பிடித்தமான வ்ார்த்தைகளின் உடும்புப்பிடியில் அவரவர்கள் நம் பிக்கை வைக்கிருச்கள். பூகோள சாஸ்திரத்தையும் விஞ்ஞான நூலேயும் இடை விட்டுத் தன்போக்கில் சுற்று: கிறிது உலகம் வாழ்க்கை வளையத்தில் மனிதன் ஊச லாடுகிருன். அவன் காலப்போக்கில் அறிந்து வியக்கும். உண்மை இது : நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைத்து விட்டதே!” - மாமல்லன் சாதாரணமான ஒரு மனிதன், அசா தாரணமான தெய்வத் திருவிளையாட்டிலே புதிர் என் னும் சொற் சிலம்பக் கூத்துக்குச் சாட்சி சொல்ல உரு வாக்கப்பட்ட சாதாரணமான-மிக மிகச் சமானியமான ஒரு மனிதன். அவன் எண்ணினுன் , அவளுல் எண்ண முடிந்தது. அவன் கனவு கண்டான்; அவனுக்குக் கனவை உண்டாக்க முடிந்தது. கண்ட கனவு சிதைந்து போனதையும் முன் ஒருமுறை அவன் உணர்ந்தான். உயிர்த் துடிப்பு இற்றுப் போற்ைபோல உடல் முழு. வதும் சூன்யம் பரவியது. சூன்யத்துள்ளே படர்ந்து பரவியிருக்கின்ற நிறைவைக் கணித்துக்கொள்ளத் தெரிந்த ஈசனேயே வம்புக்கு இழுத்தான் மாமல்லன். தன்னுடைய ஜாதகமும் தன் மாமன் மகள் மேகலையின் ஜாதகமும் ஒன்று சேரவில்லை என்பதை அறிந்ததும், அவன் அடைந்த அதிர்ச்சி இவ்வளவு அவ்வளவல்ல. அன்று எழுதப்பட்ட எழுத்தை அழித்து எழுத ஆண்ட வன் எப்படித் துணிவான் ? பார்க்கிறேன்' என்று சிந்தாமணியிடம் விடுத்த சவாலை மாமல்லன் இப்போது நினைவு கூர்ந்தான் ; பார்க்கிறேன் ! என்று கடைசியில் முத்தாய்ப்புப் பதித்த அந்த அழுத்தத்தை எண்ணிப் பார்த்தான். எண்ணியது நடக்கவில்லையே என்ற சஞ்சலத்தை விட, எண்ணியது நடக்கத்தான் வேண்டும்.