பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 என்கின்ற வைராக்கியமே மேலோங்கியது. பெற்ற வளுக்குக்கூட செய்தி தெரிவிக்காமல் அரியலூரில் வந்து குதித்த காரணத்தை மறக்கமாட்டான் ; மேகலையைத் தனியே சந்தித்து தன் திட்டத்தைச் செயற்படுத்த வேண்டுமென்று கொண்டிருந்த ஆவலையும் அவன் பசுமை யாக்கிஞன். எல்லாம் இப்பொழுது பழைய சம்பவங்கள். பெரியவர் ரங்கரத்தினம் அவர்கள் மாமல்லனிடம் நல்ல செய்தியைத் தெரிவித்தார் அல்லவா ?-அந்தச் செய்தி மாமல்லனுக்கு இன்னமும் கனவில் கேட்டது போலவேதான் இருந்தது. கேட்ட தகவல் உண்மை யென்பதை உறுதிப்படுத்திக்கொண்டு நிதானமாகத் தன்னுடைய பழங் கனவைப் பற்றியும் நொடிப் பொழுது அவன் சிந்திக்கலானன். கனவு சில அங்கங்களாகப் பிரிந்து, பின்னர் பல நனவுகளே நினைவுபடுத்தியது. கனவு, உள்ளத்தை மட்டுமல்லாமல், உயிரையும் வாழ வைக்கிறதென்ற உண்மையையும் அவளுல் புரிந்து கொள்ள் முடிந்தது. விளுத் தெரியாத காலந்தொட்டு மாமல்லனும் மேகலையும் ஒட்டியிருந்து தொட்டு மகிழ்ந்து ஆனந்தத்தை இட்டு நிரப்பிக் கொண்ட அடிநாட்க்ளேச் சிந்திக்கத் தெம்பு கிடைத்தது. அறியாப்பருவம் தாண்டி அறியும் பருவம் அண்டியதும், மாமல்லா, அதோபார் உன் பெண்டாட்டி!' என்று கேலி பேசிய உற்ருர் உறவினர்களின் வேடிக்கைப் பேச்சுக்களையும் அவன் நினைத்துப் பார்க்க நேரம் இருந்தது. அன்பை வளர்க்க -வும் வாழ்த்தவும் உரமிட்ட இருவேறு அங்கங்கள் இவை. காலச் சக்கரத்தின் சுழற்சியில் அன்பு காதலாக மாறியது; அவர்களது இதயங்களைப் பிணைத்தது; காதலின் அமுத கீதத்துக்கு அடி நாதமாக இணைந்தது. காதல் வாழத் தொடங்கியது; அவர்களும் வாழத் தொடங்கிஞர்கள். ஏமாற்றத்தை முன்னுரையாக்கிப் பயமுறுத்திய அதே காதற்கனவு இன்ப வெள்ளத்தை அவனுடைய விழிகள் இரண்டிலும் பாய்ச்சியது. அவன்_ஆனந்தக் கண்ணிர் சொரிந்தான். "ஈஸ்வரா, இப்பொழுதாவது என் லட்சியத்தை ஈடேறச் செய்தாயே!” என்று நெஞ்சம்