பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 5 நெகிழ்ந்தான். நல்லவேளை, நான் தப்பிப் பிழைத்தேன். நான் நினைத்ததைத்தான் தெய்வமும் நினைத்திருக்க வேண்டும். உண்மையிலேயே இது ஒர் அதிசயம் !!எண்ணமென்ற இச் சுடர் இதயமெனும் அகல் விளக் கினின்றும் தெறித்துச் சிதறியபோது, மாமல்லனது உடல் பூராவிலும் பெருமிதமும் எக்காளமும் பிறந்தன. அவன் வாய்விட்டுச் சிரித்தான் ; சிரிப்பின் அலேகள் கூடிக் குலவிக் கலைந்தன. பூரண நிலவு தனக்குமட்டுமே சொந்தம் என்று எண்ணி, முடிவிட்டு, இறுமாந்து, பந்தம் சேர்த்துப் பொங்கிப் பூசித்துக் கடல் ரசிக்கும் போது, பெருமிதச் சிரிப்பு இழைந்தோடுவது உண்டல் லவா ?-அப்படிப்பட்ட பாவனையில்தான் மாமல்லன் சிரித்தான். அவன் மட்டுமா சிரித்தான் ? அல்ல ; அவ னுடைய கொண்ட காதல்’ சிரித்தது ; கண்ட கனவு ? சிரித்தது , உருவாக்கி வைத்திருந்த எதிர்காலம்’ சிரித்தது. அற்ப மனிதனுக்கு இவ்வளவு கம்பீரமாக-இத் துணை அழுத்தமாக-இத்தகைய கர்வத்துடன் சிரிக்கத் தெரியுமா? சிரிக்க முடியுமா ? ஆம் ! 'மாமல்லன், உங்களை மறந்து ஏன் இப்படி கட கட வென்று சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்?" - தொடுக்கப்பட்ட வினுக் குறி மாமல்லனது நெற்றித் தளத்தில் ஆச்சரியக் குறியாக்த் தழும்பு பதித்தது. உதடு கள் கரை சேர்த்த சிரிப்பின் அமுதத் துளிகள் இன்ன மும் இனித்துக்கொண்டிருந்தன. இரு கண்களும் சிந்தனை வசப்பட்டன. ஏன் சிரித்தான் ? என்ன சிந்தித்தான் ? மனிதன் சிரிக்க யத்தனம் செய்கிருனென்ருல், ஆண்டவன் அழத் தொடங்கிவிடுவானென்ற சிருஷ்டி ரகசியம் அவனுக்கு மட்டுப்பட்டுவிட்டதோ?...கன்னக் கதுப்புக்களிலே மெல் ஜிய கறுமை வண்ணம் பூசியது. ஏன் இந்தக் கறுப்பு நிறம்? மனிதனை அழவைத்து வேடிக்கிக் பார்த்துச்