பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சொன்னன். உடனே, அவர் மாமல்லன. காலைப் பலகாரத்துக்கு அழைத்தார். தன் தாய் தன் வரவுக்காகக் காத்திருப்பதாகவும் மாமல்லன் அறிந்தான். பரபர வென்று எழுந்தான் ; சண்முகத்தைத் தொடர்ந்தான். ஈரம் காயவில்லை ; சாப்பிட்ட கையின் ஈரம். என்ன அம்மா " என்று கேட்டுக் கொண்டே உள்ளே விரைந் தான் மாமல்லன். அவனைக் கண்டதும், சற்றே விலகி நகர்ந்தாள் சிந்தாமணி. பையன் இரண்டு தட்டுக்களில் இட்டிலிகளை நிரப்பிக் கொண்டு வந்தான். இரு தட்டுக்களையும் மாமல்லன் வழி மறித்து வாங்கி ஞன் வழி பிரித்துக் கொடுத்தான். "சாப்பிடுங்க, அம்மா !” என்று சொல்லி அன்னை யிடம் நீட்டிஞன் அவன். 'அம்மாவோடு நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்க, சிந்தாமணி!” என்று அமைதியுடன் தெரிவித்தான் அவன். சில நிமிஷ நேர இடை நேரத்துக்குப் பிறகு, கோசலை அம்மாள் தாழ்வார்த்தில் அமர்ந்து வெற்றில் போட்டுக்கொண்டிருந்தாள். பச்சை நரம்புகள் நாலு தரையில் சிதறிக் கிடந்தன. ; : * பத்திரிகையைப் பிரித்துப் படித்தவாறு வந்து சேர்ந்த மாமல்லன், 'அம்மர்?' என்று கூப்பிட்டர்ன். ஏக்கமும் துக்கமும் மண்டிய தாயின் விழிகள் மைந்தனைப் பரிவுடன் நோக்கின. - . . . 'தம்பி, நான் இன்னக்கு ராத்திரி வண்டிக்கே சிந்தாமணியை அழைச்சுக்கிட்டு பட்டனத்துக்குப் போறேன்,' என்று நிறுத்தினுள் கோசலை அம்மாள். எதிர்பாரத நிகழ்ச்சிகள் நடக்கக் காணும்போது, உள்ளத்தில் அதிர்ச்சி விளைவ்து இயல்பு நிம்ன். நாமே மறந்துவிடுவோம். ஆளுல் எதிர்பார்த்த சம்பவங்