பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5] கள் ஒன்றிரண்டு எதிர்பார்த்தபடியே நிகழுகையில், அப்போது இதயத்தில் ஏற்படும் அதிர்ச்சியோ, ஏமாற்ற மோ, வேதனையோ அளவில்-பலத்தில் குறைந்தே இருக்கும். மாமல்லன் தன் அன்னையின் மனத்தை நன்கு ஆணர்ந்தவன். அவள் பெற்ற பிள்ளை இவன். சென்னை யிலிருந்து அரியலூர் மண்ணே மிதித்து அங்கு தங்கிய முதல் நாள் முடிந்தது ; இரண்டாவது நாள் பிறந்திருக் கிறது. இதற்கிடையில் அவள் தன் தமையனர் வீட்டுப் பச்சைத் தண்ணிரைக்கூட பல்லில் வைக்கவில்லே. 'அண்ணு, நீங்க இப்படி பாதகம் செய்வீங்கன்னு துளிகூட எதிர்பார்க்கலை. சொந்தமும் ரத்தமும் விட்டுப் போகாமல் இருக்கும்னு நினேச்சிருந்தேன். நீங்க இவ் வளவு காலம் சொல்லிக்கிட்டிருந்த பேச்சையும் நிஜம்னு நம்பிக்கிட்டிருந்தேன். ஊரிலே உலகத்திலே இருக்கிற வங்க மாதிரி என் மகனும் அவனுக்குப் பிடிச்ச உங்க மகளைக் கல்யாணம் காட்சி செய்துகிட்டு சுகமா இருக்க வேணும்னு நிதம் கடவுளை வ்ேண்டிக்கிட்டிருந்தேன். ஆன இப்பிடி நீங்க சிரிச்சுச் சிரிச்சு கடைசியிலே என் கழுத்தையே அறுத்துப் பிடுவீங்கன்னு களுகூடக் கானலை. நல்லாப் பொருந்தியிருக்கிற ஜாதகங்களை பொருத்தம் சரியில்லேன்னு எதுக்குப் பொய் சொன் னிங்க ? பணம் உங்க கண்ணை மிறைச்சிட்டுது ; ஆளுல் ரத்த பாசத்தைக்கூட முறிச்சுடுச்சே?... என்ன வேள் எல் -லாம் என் போதாத காலம்... எல்லாம் என் தலைவிதி...!" நேற்று சாயங்காலம் வீட்டில் அந்நியர்கள் இல்லாத தருணம் பார்த்து கோசலை தன் மூத்த சகோதரரிடம் இவ்வாறு மனம் கொதித்துப் பேசிளுள். சோமசுந்தரம் ஆடவில்லை ; அசையவில்லை. உடன் பிறந்த தங்கையைய்ே இமை வலிக்கப் பார்த்துக்கொண் டிருந்தார். ஒரு விடிை வாய் திறக்காமல் இருந்தார். பிறகு, கோசலை, நீ இப்படித் தப்புந்தவறுமாப் புரிஞ்சிக் கிட்டா, அதுக்கு நான் என்ன செய்யட்டும்? என் பேச்சை நம்பு, தங்கச்சி. மேகலை-மாமல்லன் ரெண்டு