பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 அந்தத் தாய் உள்ளம் யூகித்துணர முடியாமல் தவியாய்த் தவித்தது. "நீ இங்கே தங்கப்போறியா? அடுத்துக் கெடுத்த வங்க வீட்டுக் கல்யாணத்தை நீ பார்க்கத்தான் வேணுமா?...பெற்ற பெண்ணுேட ஆசைக்கு மதிப்பு தராமல், புதுப் பணத்துக்கு மதிப்புக் கொடுத்து வீட்டிலே முழக்கப்போற கொட்டு மேளச் சத்தத்தை நீ காது கொடுத்துக் கேட்கத்தான் வேணுமா ? மாமல்லா, உன்னை என்னுலே புரிஞ்சுக்கவே முடியலே. உன் மனசுப்படி செய் தோளுக்கு மேலே தோழன்னு சும்மாவா சொல்ருங்க?...உன் இஷ்டப்பிரகாரம் கல்யா ணத்துக்கு_இரு நானும் சிந்தாமணியும் ஏறத்திரிக்குப் புறப்படுகிருேம். என்ருள் கோசலை அம்மாள். படிப்படியாகக் குரல் கம்மி வந்ததைக் கேட்டதும், சிந்தாமணி நின்றவள் கோசலை அம்மாளை நெருங்கி வந்தாள். அவங்க பேச்சையும் நீங்க அசட்டை செய்யா தீங்க.. காரண காரியம் இல்லாமல் அவங்க எதையும் சீக்கிரம் வெளிக்காட்ட மாட்டாங்க என்று மாமல்லனின் சார்பாகப் பரிந்து பேசலாளுள். மாமல்லன் பார்வை சிந்தாமணியின் பால் திரும் கோசலை அம்மாளின் கண்ணுேக்கு சிந்தாமணியின் மீது லயித்தது. அவள் தன் மகன்யும் அந்தப் பெண் ணையும் மாறி மாறிப் பார்த்தாள். உடன் பிறந்தவரின் ரகசியப் பொய்யைக் கேட்ட வினுடியில் தெரிந்து மறைந்த ஒரு காட்சி ஏடு அவிழ்ந்ததை மறுபடி நினைத் துக் கொண்டாள். சிந்தாமணி, நீயாவது என் பிள்ளை யின் வாழ்க்கையிலே விளக்கேற்றி வைப்பாயா? என் னும் சபலம் தலைகாட்டியது. அந்த ஒரு கடைசி ஆசை - யில்தான் அவள் சென்னைப் பயன்த்துக்கு ஆய்த்தப் பட்டாள். ‘.... - . - ல்ை, மைந்தனின் எண்ணமும் அதை அனுசரித் துக் சிந்தாமணியின் jಘೀ குழப்பிவிட்டன. சரி, தெய்வம் விட்ட வழி என்று முடிவு செய்தாள். தான் சுமந்தாக வேண்டுமென்று