பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 "அத்தான் ' என்று அழைத்து அவனைப் பூவுலகுக் குக் கொணர்ந்தாள் மேகலை. இராம துரதன் கொண்டு வந்த சஞ்சீவி மூலிகை லட்சுமணனை உயிர்மீட்டெழச் செய்தது. மேகலை கொடுத்த துணிவு மொழி மாமல்லனைப் புது வாழ்வு அடையப் பண்ணியது. அவன் அவளே உன்னிப்பாகப் பார்வையிட்டான். தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் பயணத் தின்போது உருவான வைர நெஞ்சத்தையும் திறந்து நோக்கினன். போட்டு வந்த திட்டத்தின் நகலையும் திருப்பிப் படித்துப் பார்த்தான். பொருந்தாத ஜாதகங் களின் தீர்ப்பைக்கூட ம்ாற்றி யெழுதிவிட வேண்டு மென்ற குறிக்கோளுடன் வந்தவனுக்கு விதியின் நல்ல வாக்கு எதிர்பாராமல் கிடைக்கவே, பழைய தைரியத் துக்கு இப்பொழுது வல்லமை அதிகமானது. மேகலை யுடன் இங்கிருந்து வெளியேறி, தேதி குறிக்கப்பட்டுள்ள அதே சுப தினத்திலேயே மேகலையின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டுவிட வேண்டும், என்பது அவனது அந்தரங்கம். என் வாழ்வின் நிலையே நீங்கள்தானே, அத்தான் ! என்று கடிதத்துடன் கேள்வியையும் தூது அனுப்பிய சித்திரப் பாவை அவனுக்கு நம்பிக்கை யூட்டிய தெய்வமாகத் தோன்றினுள். மேகலைக்கு எழுதப் பட்டு, ஆனால் அனுப்பாதிருந்த கடிதத்தைச் சட்டைப் பையிலிருந்து எடுத்துப் படித்தபின் அதை மேகலையிடம் கொடுத்தான். அன்று கடிதத்துக்குக் கட்டிக்கொண்ட எல்லே இன்று காதலின் வெற்றித்தளத்தை எட்டக்கூட வலுவிழந்தது. அவளுல் அழைக்கப்பட்ட ஆணிப் பொன் இப்பொழுது அவனுடைய பலத்தை அறிய உதவியது. - - மேகலை !' "அத்தான், ஏன் இவ்வளவு தயங்குகிறீர்கள் ?” ஒன்றுமில்லை, மேகலை.” - "அரியலூர் உங்களுக்குப் பயங்காட்டுகிறதா? 'இல்லை ?” 'பிறகு ?...”