பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 'உன் அன்பு, மேகலை, அன்பு ' “என்னுடைய அன்பு உங்களைப் பயமுறுத்து கிறதா, அத்தான் ” "அல்ல; சிரிக்க வைக்கிறது; சிந்திக்க வைக்கிறது. கட்டுத் திட்டங்களைத் தகர்த்தெறிந்து, பணத்தின் பேரில் பாசம் கொண்ட பெற்றவர்களின் கண்ணிரைச் சட்டை செய்யாமல், குபேர புரி மாப்பிள்ளையையும் மதிக்காமல், உன்னுடைய ஏழை அத்தானுடன் வாழ்க்கை நடத்தத் துணிந்துவிட்ட உன் பெருந்தன்மை எனக்கு அளவில் லாத சந்தோஷத்தைத் தருகிறது. அன்று எழுதிய எழுத்தை அழித்தெழுதக்கூட கடவுள் துணியவில்லை பல்லவா? ஆனதால், நீயும் நானும் முதலில் இங்கிருந்து சென்னைக்குப் புறப்படவேண்டும்; ஏற்கெனவே குறித் தெழுதப்பட்ட முகூர்த்த வேளையிலேயே நீயும் நானும் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். இதுதான் என்னுடைய முடிவு ஆகும்...!” 'நான் சொல்லவேண்டுமென்று நினைத்திருந்ததை நீங்களே கூறிவிட்டீர்கள் !” "அப்படியா ?” "ஆமாம், அத்தான் !” "அப்படியானுல், இன்றிரவே நீயும் நானும் சென் னைக்குப் புறப்பட்டு விடுவோம் : 'நல்லது, அத்தான் !' "உன்னே நான் எங்கே சந்திப்பது ? ‘எப்படியும் நான் ஸ்டேஷனுக்கு வந்துவிடுவேன். கவலைப்படாதீர்கள். அத்தான் : .

  • சரி, மேகலை : - காப்பித் தூள் கம்பெனியை மாமல்லன் அடைந்த சமயத்தில், ஆங்கிருந்த மேஜைக் கடிகாரம் மணி ஏழு என்று சொன்னது, மேகல்ையை அவள் வீட்டுக்கு
  • . . on ow. A * o - - அனுப்பிவைத்து விட்டு அவன் திரும்பியபொழுது, அவனுடைய நெஞ்சில் பாய்ந்திருந்த தைரியத்தையும்