பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பண்பைச் சாட்சிக்கு அழைத்துக்கொண்டு ஏசிப் பேசுவார்களோ ? ஐயோ, கடவுளே...! குப்பைக் கூடையில் வேண்டாத கூளங்கள் மட்டும் தான் தஞ்சம் புகுகின்றனவா ? முக்கியமான காகிதங்கள் கூட சமய் சந்தர்ப்பங்களில் இடம்மாறிப் புகல் அடைவது இல்லையா ? இப்படிப்பட்ட வரம்பில் பேணுவை அழுத் தினுல், மனம் ஒரு குப்பைக் கூடை” என்றுதான் விளம்பி நிற்கும். கூடையில் குவிந்திருக்கும் குப்பைகளை மனி தனே தேடிப் பார்க்கையில், மனச்சாட்சி பழைய சம் பவங்களைத் தூண்டித் துருவி அலசி ஆராய்வதில் அதி சயம் இல்லைதானே...? . . மனத்துக்கு மனம் சாட்சி ; மற்றதற்குத் தெய்வம் சாட்சி என்று பழமொழி ஒன்று வாழ்ந்து வருகிறது. மாமல்லனைப் பொறுத்த மட்டில் மனம் சாட்சி சொன்னது ஆளுல், தெய்வம் சாட்சி சொல்லவில்லை. பேசும் மனிதன் கூப்பிட்ட குரலுக்கு பேசாத தெய்வம் எவ்வாறு செவி சாய்த்து ஓடிவர முடியும்...? அம்பு துளைத்துப் பாய்ந்தாற்போல வேதனைப் பட்டான் ; வலி தாளாமல் இன்னல் அனுபவித்தான். அம்பு !.-வில் அம்பா ? ... சொல் அம்பா ? ) இரண்டாவது களத்தில் மாமல்லன் நுழைந்தான். மேகலை அளித்த அமைதியையும் ஆறுதலையும் பறித்துக்கொண்டதன் மனத்தின் பான்மைன்யநிந்தித்த வாறு, குழப்பத்தில் கனிந்த விரக்தியோடு பூங்காவி லிருந்து நடந்து தேர்முட்டி முனையில் திரும்பியபோது திருமாறனைக் கண்டான். முதல் நாள் அவனைப் பார்த்த தோடு சரி; அப்புறம் அவனைச் சந்திக்கவில்லை; கண்டு பேச விரும்பவுமில்லை. உள்ளங்கை நெல்லிக் கனியைத் தட்டிப் பறித்துக்கொண்ட எதிரியென்று திருமாறனைக் கருதின்ை மாமல்லன். முகத்தில் கடுமையின் நிழல் படிந்தது, மாமல்லனிடம் அவன் பெயர் குறித்திருந்த அழைப்பிதழைக் கொடுத்தான் பணக்கார இளைஞன். அவன் ஏற்கெனவே படித்து முடித்த மடல்தானே ? மூக்கின் நுனியில் சூழ்ந்திருந்த நிறும்ணத்தின் வாடை