பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 அவனைத் திணற வைத்தது...! திருமாறன் ஆரம்பிக்க யிருக்கும் புது மண வாழ்வின் புதிய நறுமணம அது ? அதனுல்தான் அவன் இத்தகைய பெருமிதத்துடன் கானப்படுகிருனே ? தன் திருமணத்துக்கு அவசியம்வரவேண்டுமென்று மீண்டும் மாமல்லனிடம் நினைவூட்டினுன் திருமாறன். s 'ம்' கொட்டிவிட்டுப் பிரிந்தான் மாமல்லன். ஒரு முறை மெரிஞ கடற்கரையில் கேட்ட சிலம்புச் செல் ஆரின் சொற்பொழிவு நெஞ்சில் ஓடியது. பூங்காவில் மேகலையிடம் பேசிக்கொண்டிருக்க்ையில் அந்தச் சொற் பொழிவின் சாரத்தை எடுத்துக் காட்டியதையும் அவன் எண்னமிட்டான். "மாசு அறு பொன்னே ...வலம்புரி முத்தே! காசு அறு விரையே கரும்பே, தேனே! அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே' கண்ணகியை முன் வைத்துப் புகழ்ந்த கோவலனின் வாய்மொழிகள் மாமல்லன கைகோர்த்து எங்கோ அழைத்துப் போயின. ஆனல் அவை இப்பொழுது அவனுடைய மனச் சூருவிளிக்கு அருமருந்தாக அமை யச் சம்மதம் தரவில்லை...! மாமல்லன் இரவுச் சாப்பாட்டுக்கு அழைக்கப் பட்டான். விரிந்து கிடந்த செய்தித் தாளில் அவன் பார்வையைத் திருப்பினுன். காதலித்த ஒர் இளைஞ. னுடன் தொடர்ந்து சென்ருள் யுவதி ஒருத்தி, கோபம் கொண்ட பெண்ணின் தந்தை ஆண் பிள்ளை மீது வழக்கு தொடுத்தாராம். சட்டம் இளைஞனுக்கே சாதக மாக அமைந்ததாம். பத்திரிகைச் செய்தி அவனுக்குத் தெம்பையும் தெளிவையும் சிறுகக் கொடுத்தது. மறுபக்கம் புரட்டலாஞன். காதலித்த பெண்ணை அடைய முடியாததால், மனம்ொடிந்து போய்விட்ட குலோத்துங் கன் என்ற பெயருள்ள ஒரு யுவன் சித்த சுவாதீனம் தப்பி சென்னைத் தெருக்களிலுள்ள சுவர்களில் காதலி யின் உருவத்தைக் கிறுக்கிக் கொண்டு திரிகிருளும். இமைப் பொழுதுக்கள் தெம்பும் தெளிவும் யாத்திரை