பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ஆண்டவனிடமிருந்து நன்மையை எதிர்பார்க்கை யில் மனிதனின் மனம் ஐயன்பேரில் பக்தி கொள்வது இயல்பு. ஆனல் எண்ணியதற்கு நேர்மாருதக் காரியம் நிகழுவதைக் கண்டால், கடவுள்மீது வைக்கப்பட்ட பக்தி தன்னலே குறைந்து, ஆத்திரம் தலையெடுக்கின்றது. இப்ப்டிப்பட்ட பண்பு மற்றத்தின் விளைவாகத்தான் இயற்கையின் நியதிகூட தலைகீழ்ப்பாடமாகி விடுகிறதோ? படைத்தவனையே வம்புக்கு இழுக்கவும் துணிகின்ருனே மனிதன் இந்நிலைக்கு மாமல்லன் சாட்சியாக அமைய வில்லையா...? மாமல்லன் இப்பொழுது புத்தம் புதிய மாமல்லன். மேகலையின் பொன்னிறக் கழுத்தைக் கைவிரல்கள் தீண்ட, மேனி அழகு அவ்வளவையும் ஜோடி விழிகள் மோடி செய்து அனுபவிக்க, அவன் மங்கல நாண் பூட்டினன் அல்லவா :-அப்போது அவனது உடலில், உள்ளத்தில், உயிரில், உணர்வில் புதுமை மிகுந்த ஏதோ ஒர் அனுபவம் கிளர்ந் தெழுந்தது. மேகலை இனிமேல் என் நிதி!' என்ற எண்ணம் தோன்றிய சமயத்தில் அவன் ஆண்டவனிடம்தான் முதலில் ஓடி ஞன். அப்பனே, என்னை மன்னித்துக்கொள் ! என மின்ருடிப் பிரார்த்தித்தது மனம். எண்ணியது பலித்து விடும்போது, இறைவன் பால் கனியும் பக்தியினை சுயநல மென்று உரைக்கலாகாதா? மணவறையில்-சுடரொளி சிந்தி வாழ்த்திய ஹோமத்தியை அவனுல் மறக்க முடி யாது; புதுப் புனலாடி, கணவனும் மனைவியும் தீ வலம் வந்தபின் வான வெளியின் கீழே நின்று அருந்ததியை அண்ணுந்து பார்த்த பரம்பரைப் பண்பாட்டைத்தான் அவன் மறப்பான காலவிளக்கின் நல்லாசியும், அட் சதை மணிகளின் வாழ்த்தொலியும் இன்னமும் காது களில் எதிரொலித்துக் கொண்டிருந்தன். ‘என் கனவு பலித்து விட்டது; ஆஹா, என் கனவு பலித்துவிட்டது.: ஆமாம், என் கனவு பலித்து விட்டது...!" * - . ိဋ္ဌိဉ္စိတ္ဆိုႏွစ္တို இவ்வாறு அவன் எண்ணற்ற 5-6 ಮಿರ್ಹ எண்ன -ான், இதயக் களிப்பின் நிறைவுடன் அருகிருந்த யை நோக்கிஞன். எழிற் கன்னியின் கள்ள் விழிப்