பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 பார்வையில் போதை தெரிந்தது; அவனது விழிகள் தட்டாமாலை சுற்றின. அந்த நோக்கில் போதமும் இருந்தது ; அவனுடைய முகத்தில் பிரதிபலிக்கப்பட்ட அறிவு பிரகாசித்தது. - மணமாலைகள் இரண்டும் தனித்தனியே உள்வீட்டுச் சுவர் ஆணிகளில் ஓய்வு பெற்றன. கோசலை அம்மாளின் கண்களில் ஆனந்தக் கண்ணிர் இருந்தது. அவளுடைய அண்ணி மர்கதவல்லி அம்மை கையில் ஏந்திய வெற்றிலைத் தட்டுடன் எதிரில் நின்று கொண்டிருந்தாள். ஐந்தாறு நிமிஷ நேரமாக நின்ற தால், கால் கடுத்தது; வலது கைத் தட்டும் சுமையாக அமைந்தது. ஆகவே, தாம்பூலத்தை கைமாற்றினுள். அப்போது தங்கிக் கொலுசுகள் ஒன்ருேடொன்று உரசிக் கொண்டன. அதன் விளைவால், மெல்லிய ஒலி மெள்ளப் புறப்பட்டு நின்றது. கோசலை தலையை உயர்த்தினுள்; விழி நீருக்கு வழி விட்டாள் ; பெருமூச்சு வெளி வந்தது; மலர்ச் சிரிப்பு முகங் காட்டிற்று. கண்ணிர் கைவிரல்களுள் பதுங்கியது. கூடத்தில் விரித்திரிந்த ரங்கூன் பாயில் மூன்று சொட் டுத் துளிகள் சிதறிக் கிடந்தன. - “வாங்க, அண்ணி : சிரிப்பின் இழைகளைப் பிரித்தெடுத்த வண்ணம், இடது கையிலிருந்த வெற்றிலைத் தட்டை வலது கைக்கு மாற்றி நீட்டினுள் மரகதவல்லி. - "பந்தியெல்லாம் முடிஞ்சிட்டுதுங்களா, அண்ணி? "ஆமாங்க : - - "எங்க சிந்தாமணி என்ன செய்யுதுங்க, கண்டிங் களா ??? • . . . . . - “உங்களோடேதான் சாப்பிட்டுச்சு; இப்போ நம்ப தங்கமணிப் பாப்பாவோடு விளையாடிக்கிட்டிருக்குது: 'அப்படியா ?? . - *ʻiâ !” . "சிரிச்சுக்கிட்டுத்தானே இருக்குதுங்க