பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 "உங்க அண்ணன் அடிப்பட்ட நிலைக்குத்தானே நம்பளைக் கொண்டார யிருந்தாங்க ?? "வாஸ்தவந்தான் அண்ணி. என்னமோ, மலைக். கோட்டைப் பிள்ளையார் கடாட்சத்தினுலேதான் எல் லாமே நல்லபடியா முடிஞ்சிருக்குது. ஆதி காலந் தொட்டு நாம பேசிக்கிடுவோமே, எங்க மாமல்லனுக்குத் தான் உங்க மேகலைன்னு ; அதுப்படியே நடந்திட்டுது. கடவுள் துணையாலே அண்ணன் மனசு மாறுறதுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுது. உங்களை நான் மறக்க முடியா துங்க அண்ணி !” "அப்படியெல்லாம் என்னைத் தூக்கிவச்சுப் பேசா தீங்க, கோசலை உண்மையை ஒளிவு மறைவு இல்லா மல் சொல்லவேனுமானுல், நாங்கதான் உங்களை மறக்க முடியாது. பட்டணத்துப் படக் கம்பெனிக்காரன் பறிச் சுக்கிட்ட மானம் மரியாதையை நீங்கதானே திருப்பித் தந்தீங்க, கோசலை ? உங்க குடும்பத்தை நானே மேகலை யோ இந்த ஜன்மத்திலே மறக்கவே முடியாது ' உணர்ச்சிச் சுழிப்பின் காரணமாக சொற்கள் தெளி' விழந்து ஒலித்தன. - சோமசுந்தரம் ஏப்பும் பறித்தபடி கூடத்தில் வந்து நின்ருர். ஜன்னல் கதவுகளைத் திறந்துகொண்டு அனற். காற்று உள்ளே எட்டிப் பார்த்தது. மார்பிலும் நெற்றி யிலும் வழிந்த வியர்வையை துப்பட்டாவினல் துடைத் தெடுத்தவாறு, திண்டுக்கல் வெற்றிலைகள் நாலைந்தைச் சேர்த்து எடுத்தார் ; வாசனைச் சுண்ணும்பு சுட்டும் விரல் துனியில் பந்தம் சேர்த்தது; பற்களின் இடுக்குகளில் சாயப்பாக்கு நைந்தது ; எச்சில் ஊறியது ; வெற்றிலைக் காம்புகள் தரையில் நழுவின. - ... " புருஷனைக் கண்டதும் எழுந்து சற்றே ஒதுங்கிய மரகதவல்லி உடனே தன் நாத்தனர் கோசலையின் பக்கத். தில் போய் நின்ருள். பெண்டிர் இருவரையும் அடுத்தடுத். துப் பார்த்தார். சோமசுந்தரம். பிறகு அவர் தம் தங்கை கோசலையை அண்டி, தங்கச்சி, நீங்க இரண்டு ே பேசிக்கிட்டிருந்தது என் காதுக்குக் கேட்டுது," என்று. சொல்லி அத்துடன் பேச்சைத் துண்டித்துவிட்டார்.