பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மாமல்லனின் அன்னைக்குத் திகைப்பு மேலிட்டது. மேகலையை ஈன்றவளோ எவ்விதமான சலனமும் இல் லாமல் காணப்பட்டாள். நாத்தளுருக்குப் பாசத்தின் பிடிப்பில் கவனம் அதிகம் அண்ணிக்கோ யதார்த்த உண்மைக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமென்கின்ற எண்ணம். இருவரின் குறிப்புக்களையும் எடைபோட்டுப் பார்க்கவா அவர் வந்திருந்தார் ? அல்ல ! கோசலை அம்மாளின் நினைவுகள் கடந்த சில நாட் களைத் தாண்டின. மேகலை தன் மகனுக்குக் கிடைக்கும் "லவிதம்'இல்லை யென்னும் உண்மையை ஜாதகம் அறிவித்த தருன்த்தி லேயே கோசலை அம்மாள் சென்னைக்குப் புறப்பட்டுப் போக வேண்டுமென்று முடிவு செய்தாள் : மறுகணம், சென்னைக்குப் போவதற்குப் பதிலாக திருச்சிக்கே போய் விடலாமோ என்ற ஒரு நினைவும் நெஞ்சில் நெளிந்தது. ‘கரி, பார்க்கலாம்; எதற்கும் சிந்தாமணிப் பெண்ணைக் கலந்து முடிவு செய்துகொண்டால் போகிறது ' என்ப தாகவும் ஒரு திட்டம் உருவெடுத்தது. இப்படிப்பட்ட நிலையில்தான், மாமல்லன் தாயிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்தான். மேகலையின் திருமணம் முடியும் வரை அவள் அரியலூரில் இருக்க வேண்டுமென்பது தான் அவனுடைய விண்ணப்பத்தின் பொருள். கடைசி யாக 'ம்' கொட்டினுள் அன்னை : தன் தமையன் வீட்டுப் பச்சைத் தண்ணிர்கூட பல்லில் படாதென சூளுரைக்க வும் அவள் மறக்கவில்லை. ஆளுல், பாசமும் சபதமும் ராசி ஆகிவிட்டன. மேகல்ை-மாமல்லன் இணிையின் நல்லதிர்ஷ்டம், சோம் சுந்தரத்துக்குரிய சைகோன் சொத்துக்குத் தீவினை விளைந்தது. கடன் ரகசியத்துக்கும் காற்றுக்கும் ஏக சம் பந்தம் இருக்கவேண்டும். காற்றை எப்படி யாரும் அனை கட்டித் தேக்கிவிட இயலாதோ, அம்மாதிரி கடன் ரகசி யத்தையும் ஒருவராலும் ஒளித்து வைக்கமுடியாது. எப்படியோ செய்தி பட முதலாளிக்கு எட்டியது. அப்பா வுக்குப் பணத்தில்தான் நாட்டம் ; இளவரசுப் பட்டம் மாறனுக்கோ மேகலையின் எழிற் கூட்டில் இஷ்டம். க்குத்தான் இறுதி வெற்றி கிடைத்தது. தேதி