பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 வைத்த முகூர்த்தத்துக்கு ஒப்ப மறுத்துவிட்டார் தன வந்தர். சோமசுந்தரத்துக்கு விஷயம் எட்டியது. தலையில் விழுந்த இடி அடிவயிற்றிலே வெடித்தது. ஐயோ, இப்ப நான என்ன செய்யப்போறேன்?. ஊருக்காரங்க என்னைத் தூற்றப் போருங்களே ...பெரிய இடத்துச் சம்பந்தம் மேகலைக்குக் கிடைக்கவேணுமேன்னுதானே முதலிலே பொருந்திப்போன மேகலை - மாமல்லன் ஜாத கத்தைப் பொருந்தலேன்னு கூட நான் பொய் சொல்ல வேண்டி வந்துச்சு! கடைசியிலே என் வினை என்னையே சுட்டுப்பிடுச்சே?... என் தலைவிதியே என்னைக் குழி தோண்டிப் புதைச்சுப்பிடப் பார்க்குதே ? ஈஸ்வரா, என் மானத்தைக் காப்பாற்று’ என்று துதி பாடினும் ! அவருக்குப் புதிய யோசனை ஒன்றை அருளினுன் ‘எல்லாம் வல்லவன்' தட்சணமே தங்கையிடம் ஓடி வந்தார் ; அவருடைய மதிப்பும் கெளரவமும் கோசலை யின் தீர்ப்பில் இருப்பதை உணர்ந்தறிந்தவர் இல்லையா அவர் ? மேகலையை நீதான் கோசலை உன் மருமகளாக ஏற்றுக்கவேனும்," என்று கண்ணிர் எச்சரிக்கையுடன் வேண்டினர் நடந்ததை ஆதியோடந்தமாகக் கூறினர்; மன்னிப்பும் கேட்டார். கோசலை அம்மாளுக்குப் பெரும் அதிர்ச்சியாகப் போய்விட்டது. மைந்தனின் கனவுக்கு முழு வடிவம் கொடுக்க வேண்டுமென்னும் ஒரே நினைவு அவளுடைய வைராக்கியத்தைக் கூட இருந்த இடம் தெரியாமல் மறைத்துவிட்டது. மணக்கோலம் பூண்ட ஒரே மகனைக் கண்பூத்துப்போகும் பரியந்தம் பார்த்துக்கொண்டே யிருந்தாள் பெற்ற அன்னை. - • சோமசுந்தரம், தங்கச்சி !! என்று நினைவுத் தந்தியைச் சுண்டிவிட்டார். கம்பிகளிலே உறங்கும் இசைக்கும் மனத்தளத்தில் கண்வளரும் நினைவுக்கும் வித்தியாசம் குறைவு. - ン > நின்று நிலைத்துவிட்ட உண்மை அவருக் துக் கொடுத்த பாடம் மனச்சாட்சியின் குரலாகு