பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 பின் கட்டில் தனித்திருந்த அவர்களுக்கு எது வேண்டுமானுலும் பேசிவிட முடியாதல்லவா ? எனவே, அப்போதைய உரையாடலுக்கு முற்றிப்புள்ளியிட எண்ணிய மேகலை, ஸ்டுலில் கிடந்த புத்தகத்தைப் புரட்டினுள். எஸ். எஸ். எல். ஸி. பரீட்சைக்குப் படித்தது. அது கலித்தொகை. தமிழ்த் திருமண மரபு பற்றிப் பேசிய பாடலொன்று. நம்பியும் நங்கையும் பரஸ்பரம் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். ஆளுலும், தலே மகளுக்குப் பெற்ருேரின் கருத்து யாதோ என்ற ஐயப் பாடு. இதை அறிந்த தோழி தமிழ் மரபைச் சுட்டிக் காட்ட எண்ணுகிருள். அவர் மீது நீ காதல் கொண்டது மெய்யானுல், உன்னை அவர் காதலிப்பதும் உண்மையாயின், நீ வீணே மன உளைச்சலுக்கு ஆளா வது ஏனே ? மேலும், உன் அன்னையின் மனமும் உன் உள்ளத்தைப்போலத்தான் இருக்கும்; கவலை விடுக ! என்கிருள். பாடலின் இதயம் இது, நின் வெய்யன் ஆயின் அவன் வெய்யை நீயாயின் நின்னே நோதக்கதோ இல்லமன்; நின் நெஞ்சம் அன்னை நெஞ்சாகப் பெறின் ! அத்தான் மாமல்லனை மேகலை அவள் விருப்பப் படியே மனம் புரிந்துகொள்ள வேண்டுமென்று சோம. சுந்தரத்திடம் படித்துப் படித்துச் சொன்னவளாயிற்றே மரகதவல்லி ?...காதலே கனவாக கனவே காதலாகஇப்படிப்பட்ட இரு வகையான உணர்ச்சிச் சுழிகளுக்கு இடையில் மேகலை சற்றிச் சுழல, காலத்தின் இதயம் டக் டக் என்று ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. w மெளனம் பொல்லாதது. ஆகவே, மேகலையை அண்டிய சிந்தாமணி அவளிடம் காதோடு காது சேர்த்து ரக்சியம் ஒன்றை வெளியிட்டாள். மறுகணம் மேகலையின் ー空#邑p@ முகப் பரப்பில் நாணம் கண் திறந்தது. முத்துப் - பற்கள் முத்து நகை சிந்தின. ப்ோ, சிந்தாமணி. நீ என்னை கேலி பண்ணுகிருய் 1: ' '