பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 முப்பழமும் சோறும் தலை வாழை இலையில் பரிமாறப் பட்டிருந்தன. மாப்பிள்ளைக் கோலம் .ெ ம. ரு கிட, மாமல்லன் சம்மணம் கோலி அமர்ந்திருந்தான். மெட்டி மெட்டு இசைக்கக் கேட்டான் ; கண்டான். வளர் பிறையை தன்னக்கட்டி’ப் போய்வரச் சொன்னுன் அவன். பிற்பாடுதான் மேகலையை கண்கூட்டுக்குள் பிடித்துப்போட மனம் இசைந்தது. மேகலைதான அவள்? -மைதவழ் விழிகளில்ே மதர்ப்பு ; மெய் விளையாடும் உள்ளத்திலே இன்ப வேதனை ; பண் அமைத்த வாய் மடலில் பனி சேர்த்த சுவை ; தாலிக்கூறை , முகூர்த்த ரவிக்கை , நெற்றியில் திலகம் , அணி செய் நகைகள் அந்தம் பதிந்த அலங்காரம்: ஆமாம், மேகலையேதான் வெண்ணெய் உருகினல்தான் மணக்கும். ஆனல் மேகலையோ நினைவிலும் உருவிலும் மணம் பரப்பினுள் ! நெய்யும் கையுமாக வந்தாள் பூவை ; சுடு சோற்றில் உருகின நெய் ஒடியபோது, மேகலையின் கை இனித்தது. கொம்புத்தேன் அவள் அவனை விழி உயர்த்தி நோக்க நாணினுள். அவனுக்கும் வெட்கம் கட்டுச்சோறு : கட்டிக் கொண்டு வந்து சேர்ந்தது. தென்றல் சுமந்த இதயத்தில் புலம்பு முத்து தென்பட்டது , திருமாறனின் உருத்தெரியா உருவம் தென்பட்டது. மேகலையின் மார்பகத்தில் தாலியுடன் கொஞ்சியது வைர அட்டிகை : அவனுடைய இடது கை விரலொன்றில் வைர மேர்திரம் பிரகாசித்தது. சில நாட்களுக்கு முன் அவனுக்கு வந்த திருமாறனின் பதிவுக் கடிதம் தெரிந்தது. - -

  • அன்பு மிகுந்த உயிர்த் தோழன் மாமல்லனுக்கு, o திருமாறனை உனக்குப் பிடிக்காத நாட்கள்

சமீபத்தில் இருந்திருக்கலாம். _ ஆ ளு ல் என்றென்றும் நீ என் உயிர் போன்றவன்: அன்புக்கும் நட்புக்கும் மதிப்பு கொடுப்பதுடன் நிற்பவனல்ல. நான் ; அவை இரண்டையும் இணைத்து சோதனை செய்து பார்க்கும் தனி இனிதன் நான். பைத்தியக்காரன் என்று ல்லும் உலகம். மாமல்லன், என்னை நீ நம்பு 1. உன்னுடைய