பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 பாவை மேகலை என்பதை சிந்தாமணி மூலம் கேள்விப்பட்ட மறுகணமே, என் நெஞ்சி வி ரு ந் து மேகலையை இறக்கிவிட்டேன் ; அழைப்பிதழில் என் பெயர் இருக்கும் இடத்தில் உன் பெயர் அழகு காட்டச் செய்தேன். தியா கத்தை கதைகளிலே, நாடகங்களிலே, சினிமாப் படங்களிலே மட்டுந்தான் நான் சந்தித்திருக் கின்றேன். இன்று அந்தத் தியாகத்தை நிதர் சனமாக உணரவும், உணர்த்தவும் முடிந்திருக் கிறது. என் பெயருக்கு உள்ள நிதிக்குப் பயன் கிடைக்கவேண்டுமல்லவா ? வைர அட்டிகை ஒன்று தொடர்கிறது. இது என் அண்ணியார் திருமதி மேகலை அவர்களுக்கு. மைத்துனனின் பரிசை மறுக்க யாருக்கும் அதிகாரம் கிடை யாது, ஜாக்கிரதை அண்ணனுக்கும் ஒரு பரிசு கிடைக்கும். தோழனைவிட அண்ணனுக நீ அமைவதில்தான் எனக்கு ஆனந்தம். பெண் அழைப்புக்கு எப்போது நாள் பார்க்கப்பட்டிருக்கிறது ? r உன் திருமாறனுக்கு விருந்துச் சாப்பாடு வேண்டுமாம் ! அன்பின் அடிமை, - திருமாறன். ' அவனுக்குச் சுய நினைவை ஈந்தவள் மேகலை. துணைவன் உண்டான் ; உண்ட எச்சில் இலையில் துணைவி உண்டாள். தாம்பூலம் மடித்துக் கொடுத்தாள், ! வெண்பற்கள் சாயம் பூசிக்கொண்டன. மாடி முகப்பில் காற்ருட வந்து நின்ருன். கீழே, பைத்தியக்காரன் போன்றிருந்த ஒருவனுடன் சிந்தாமணி உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டான். திடுக்கிட்டது நெஞ்சம். மாடிப்படியை விட்டு இறங்கிக் கீழே போக எண்ணினுன் மாமல்லன். ஆளுல் கதவுகள் தாழிடப்பட்டிருந்தன. பாரதி வாய் திறந்தார் :