பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 இளைஞன் கண்களை மூடி மூடித் திறந்தான். உதடு கள் பிரிந்த நேரம் கண்டு, மெல்லிய இளநகை இழை யோடியது. அதை அமரப் புன்னகை என்பதற்கில்லை. ஆகவே, அவன் அவனேதான் ! - சாதாரணமான அவன் சிரிப்பு வலுத்தது. உலகத்தின் விழிகளும் காதுகளும் இயக்கம் பெருத நேரம் அது. அவன் சிரித்த சிரிப்பு இரட்டிப்புப் பலன் கண்டது. - 藝。 மேகலைக்கு ஆத்திரம் இரண்டு மடங்காக ஆனது. 'நீங்க யாரு ?” а е в * * * * * * * * * * * * is a e = * * * * * * * * * * * "ஐயா, நீங்க எந்த ஊராயிருந்தாலும், உங்களுக்கு என்ன பேராயிருந்தாலும் எனக்குக் கவலை கிடையாது. முதலிலே நீங்க எங்க வீட்டை விட்டுக் கிளம்புங்க. ஆமாம், சொல்லிவிட்டேன்!” 欢露 * 3

  • * * * 6 & q & 4 o' to

அவளது பற்களிடைப் பிறந்த ஆத்திரத்தை அவன் கருதவேயில்லையா ? நீரிடைப் பிறக்கும் புற்புதம் இமைப் போதிற்குள்ளாக உடைந்து சிதறுவது உண்டு ; ஆளுல், மேகலையின் கோபம் நீர்க் குமிழியாக மாறிஞல்தானே ? இரவு மங்கை மூடியிருந்த கறுப்புச் சால்வை நழுவி ஓடியது. வதனம் ஒளி கண்டது. - - - ஹாலின் கிழக்குப் பகுதியில் வணங்காமல் நின்று கொண்டிருந்த நிலைக்கண்ணுடி மேகலையின் அழகுக்கு வக்கனை சொன்னது. கோணல் மாணலாகி விட்டிருந்த தலை வகிடு வாகுடன் விளங்கிற்று; நெற்றிப் பொட்டு புத்துயிர் பெற்றது; மாற்றப்பட்ட உடைகளிலும் கூட நறுமணம் உறவாடிக் கொண்டிருந்தது. கண்ணுடியை நோக்கினுள். இனிய காட்சிகள் நெஞ்சில் சிலையோடின. அவளுக்கு வெட்கம் வந்து தொலைத்தது. வெட்கம்!