பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தனயன். மூப்பெய்திய அன்னையின் இதயம் விம்மலை எதிரொலித்துக் காட்டியது. அவன் துடித்தான் ; துவண்டான் , திகைத்தான் திக்குமுக்காடின்ை. 'அம்மா." ஒண்ணுமில்லே, தம்பி. அமைதியாயிரு ...ம்.. உன் அப்பா உன் கல்யாணத்தைக் காண முடியலை யேன்னு நினைச்சேன்...என்னையே மறந்திட்டேன் ; அவ்வளவுதான் !' இளைஞன் தேம்பினுன் , மூதாட்டி ஆறுதல் சொன்னுள். - -

  • மாமல்லா, என் தமையனுர் அரியலூரிலேயிருந்து லெட்டர் போட்டிருக்காங்க. உன் ஜாதகத்தையும் உன் மாமன் மகள் மேகலை ஜாதகத்தையும் ஜோஸ்யர்கிட்டே கொடுத்திருக்காங்களாம். அநேகமா இன்னும் நாலு நாளில்ே தகவல் எழுதுவாங்க' என்று விளக்கம் தந்தாள் கோசலை அம்மாள். -

- கை நொடிப் பொழுது மாமல்லன் சிந்தனையின் பிடிக்குள் அகப்பட்டு விழித்தான். தனக்குத் திருமணம் என்று வீட்டில் செய்தி சொல் லக் கேட்டவுடன் தான், முதன் முதலில் பெண்ணுக்கு வெட்கம் புறப்படுமாம், அறிந்தவர்கள் சொல்லுவார்கள். அதே நில்ை ஆணுக்கும் ஏன் பொருந்தாது?...இதோ, மர்மல்லன் இருக்கிருனே ! ...ஏதோ ஒரு தமிழ்த் திரைப் படத்தில் கண்ட கதாநாயகியின் நிலை ஞர்ப்கத்துக்கு வந்தது. வலது காற் பெருவிரல் தரையில் கோலம் ப்ேர்ட படாதபாடு பட்டது. முகத்திரையில் வெட்கத் தின் கோடுகள் இருந்தன. ஆனல் தரையில் கோலத் தின் இழைகள் பின்னப்படவில்லை. காரணம், அது சிமெண்டுத்தரை. - - . . . கோசலை அம்மாள் மைந்தன்மீது ஏவிவிட்ட அன்பு நோக்கை விலக்கவில்லை ; வெட்டவில்லை. அவள் தன்னுள் சிரித்துக் கொண்டாள். நல்ல மரமல்லன்!.

ல் வெட்கம் !...எனக்கு ஒரு மகள் இருந்தால், தன்