பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 | பிரயத்தனப்பட்டான்; இயலாமல் போய்விட்டது. அந்த நாளிலே மணிமேகலை வசமிருந்த அமுதசுரபிபோல இந்த நாளில் நம் மனித மனங்கள் அமைந்து விடு மானுல், அள்ள அள்ளக் குறையாமல் துள்ளித் துள்ளி ஓடி வருமே பழைய நினைவுகள்...? அதே தருணத்தில், மாமல்லனுக்கு இன்னுேரு சிந்தனையும் பொறி தட்டியது. ஒருநாள் அலுவலகத் துக்குச் சென்று கொண்டிருக்கையில், வழிச் சுவரில் கிறுக்கியவாறிருந்த பைத்தியக்காரன் ஒருவனைக் கண்டா னல்லவா ?- அதுதான் மேற்படி சிந்தனை தொலை தூரம் இருந்து பார்த்த அவ்வுருவத்தைக் கொண்டு அடையாளம் கண்டுகொள்ள முடியாதுதான் ; ஆணுலும் அவன் எண்ணுமல் இருக்க முடியுமா? அவன், அந்த ஆள்தான் குலோத்துங்களுே?’ என்பதாக மீண்டும் குழப்பினுன். சிந்தாமணி தன் நினைவு இன்றி வெட் டுண்ட மரம்போல மயங்கி விழுந்ததற்கு ஆணி வேராக யிருந்த காரணத்தைத் தெரிவித்த பழைய் பத்திரிகைச் செய்தியும் அவனுக்குப் புதிதல்லவே ! மாமல்லன் ஆழ்ந்து நோக்கினன். குலோத்துங்க னின் வலது கால் கிட்டை விரல் சிமெண்டுத் தரையில் உரசிக் கொண்டிருந்தது. மாமல்லனின் இதயத்தில் என்னவெல்லாமே சந்தேகங்கள் முளைவிட்டுக் கிளை பரப்பின. - - குலோத்துங்கன் ஏன் இப்படி மாறினன்? சித்தம் தடுமாறியதால்தான் சிந்தன்ையும் தடுமாறி விட்டதா? ஏன் இத்தகைய மாறுதல் நிகழவேண்டும் ? இவ்வளவு நாட்களாக குலோத்துங்கனைப்பற்றி, சிந்தாமணி மூச்சுக் கூட விடவில்லையே. ஏன் ? எவ்வளவு நாளாக இவன் இப்படி நாடோடியாக, சுய சிந்தனை தப்பியவளுகச் சுற்றுகிருன் சிந்தாமணியின் அத்தான்தான் இவன் என்பது வாஸ்தவமாக இருக்குமல்லவா ? அப்படியாளுல் இவனே அவளுடைய நிரந்தரமான அத்தாளுகவும் வாய்த்து விடுவாஞ ...” தாரணியின் பாகத்தில் பம்பரத்தைச் சுழலவிட்ட