பக்கம்:வெறுந்தாள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Tा. # 99 னார்கள். அது என் பார்வையில் வெறுந்தாளாகக் காட்சி அளித்தது. இனி அந்தத் துருதுருப்பான விழிகளை நான் சந்திக்க முடியாது. என் பேனாவுக்கு அழகுணர்ச்சியை ஊட்டிக் கொண்டிருந்த அந்த உருவம் என்னைவிட்டுப் பிரிகிறது. என்னால் அதை ஒன்றும் தாங்க முடியாதுதான். அவள் இதுவரை குழலினிது, யாழினிது என்று சொல்லிக் கொண் டிருந்தாள். இனி தன் குழந்தையின் மழலைச் சொல்தான் இனிது என்று பேசப் போகிறாள். பாசம் என்பது மூன்றாவது எல்லை, அந்த எல்லையை அவள் தொட்ட பிறகு மறுபடியும் இந்த இலக்கியம் அவளை இழுக்காது. இலக்கியம் ஒரு கருவியே தவிர முடிவு இல்லை. வாழ்க்கையை அறிய இலக்கியம் துணை செய்கிறது அவள் வாழ்வின் பயனை அறியும்பொழுது, இனி அவள் மனம் இலக்கியப் பிரச்சனையில் எப்படி இறங்கும். சரி. இனி அவளை நான் ரசிகையாக்குவது என்றால், ஒரே வழிதான் இருக்கிறது. குழந்தைகள் வளர்ப்பது எப்படி என்று ஒரு புதிய அம்சத்தை என் புதிய பத்திரிகையில் சேர்க்க வேண்டியதுதான். இனி அவள் அதைப் போன்ற இலக்கியங்களைத் தான் படிப்பாள். இனி நானும் குடும்பப் பத்திரிகைதான் நடத்த வேண்டும். எந்தப் பத்திரிகை நடத்துவது என்ற ஆராய்ச்சியில் என் மனம் சுழன்று கொண்டிருந்தது. குடும்பப் பத்திரிகைகள் ஏராளம் பெருகிவிட்ட இந்த நாட்டில் சமூகப் பத்திரிகை ஒன்று கட்டாயம் வேண்டும். இளைஞர்களின் புதிய சிந்தனைகளைப் பதிவு செய்ய வேண்டும். அதுதான் இந்தச் சமூகத்திற்குச் செய்யும் மாபெரும் பணி என்று எண்ணிக் கொண்டிருந்தேன். வானம்பாடியின் கவிதைகள் தொகுப்பு ஒன்று என் மேசைமேல் இருந்தது. அது மிக அழகாக அச்சிடப்பட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/100&oldid=914497" இலிருந்து மீள்விக்கப்பட்டது