பக்கம்:வெறுந்தாள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Iуп, ё 101 அவள் காலதாமதம் செய்யாமல் இந்த முறை வந்தாள். 'எல்லாம் அவர் சொன்னார்' என்று என்மேல் பாரத்தைப் போட்டுவிட்டுப் பத்திரிகையைக் கைநீட்டி வாங்கினாள். 'என்ன குழந்தை 3 * 'பெண் குழந்தை?” 'பெயர் வைத்துவிட்டீர்களா?” 'ஆசிரியர் வரவேண்டும். அவர்தான் நல்ல பெயரை வைப்பார் என்று எதிர்பார்க்கிறாள்' என்று கூறி முடித்தார். என் மனைவிக்கு ஒரு மகிழ்ச்சி, இனி சச்சு இங்கு வரமாட்டாள். வீண் பிரச்சனைகளைப் பேசிக் கொண் டிருக்க வேண்டியதில்லை. வருகிறவர்களை வா என்று வரவேற்கும் சடங்கு இருக்கிறவர்களுக்குக் காப்பி, டீ தந்து அனுப்ப வேண்டி வேலை அவளுக்கு இல்லை. சரசுவதியின் பேரில் அபாரமான பாசம், பரிவு எல்லாம் பாயத் தொடங்கியது. குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் அவளிடம் நிரம்பியது. பரிசு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தாள். அந்த நினைப்பில் அவள் ஆழ்ந்தாள். எந்த விளையாட்டுப் பொருள் வாங்குவது என்பதில் அவள் கவனம் சென்றது. 'வீட்டில் இருக்கிற பழைய பொம்மைகள் ஏதாவது' "புதிதாக வாங்கவேண்டும்' என்று சொல்லி நவீனப் பெண்’ என்ற சித்திரம் வடித்த பொம்மையை வாங்கி வந்தாள். அந்தப் பெண் பொம்மை இடுப்பு தெரியச் சேலையும், உடல் தெரிய ஜாக்கட்டும் போட்டு இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/102&oldid=914501" இலிருந்து மீள்விக்கப்பட்டது