பக்கம்:வெறுந்தாள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வெறுந்தாள் 'என்ன இது' என்று கேட்டேன். 'இதுதான் உங்கள் சரசுவதி காணும் புதுமைப் பெண்' என்று கிண்டல் செய்தாள். அதைப் பற்றிப் பிறகு யோசனை செய்து கொள்ள லாம் என்று விட்டு வைத்தேன். அதற்குள் என் மனைவியின் எதிரொலியில் சென்று விட்டேன் வந்தவர்களை விட்டுவிட்டு. "கட்டாயம் வருகிறோம் டாக்டர் என் வாழ்த்துக் கள்” என்று சொல்லி அவரை அனுப்பினேன். இப்பொழுது தன் மனைவி மாறிவிட்டாள் என்று கூறினார். நான் கேட்காமலேயே அவர் பேசத் தொடங் கினார். "Fees வாங்காமல் நோயாளிகளைக் கவனிப்பதை அவள் ஒப்புக் கொள்ளவில்லை. அவள் எதிர் காலத்தைப் பற்றிக் கவலைப்படுகிறாள்' எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் கடந்தகால அனுபவங்களின் சுமை எண்ணிப் பார்க்க முடிந்தது. பிறந்தது பெண் குழந்தை. அதற்கு ஒரு எதிர்காலம் அமைத்துத் தரவேண்டும். அவள் கற்பனை எங்கோ சென்றுவிட்டது என்பதை உணர முடிந்தது. அவள் அவ் வளவு சீக்கிரம் முழுக் குடும்பப் பெண்ணாக மாறிவிட்டாள் என்பதை உணர முடிந்தது. நிச்சயம் அவள் கற்பனை தன் மகளை எந்த boy friend டோடு அனுப்ப இடம் தராது என்பதையும் உணர முடிந்தது. சம்பிரதாயம் கெடாத வகையில் அக் குழந்தை யைப் படிக்க வைத்து அவளை முன்னுக்குக் கொண்டு வருவாள் என்று எண்ணத் தோன்றியது. 'நீங்கள் தான் வந்து பெயர் வைக்க வேண்டும்' என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவர் சென்ற பிறகுதான் வானம்பாடியிடம் பேச முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/103&oldid=914502" இலிருந்து மீள்விக்கப்பட்டது