பக்கம்:வெறுந்தாள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 107 எப்படி இருப்பாள் என்பதைக் காட்டினாள். அவளைக் கண்டு நான் வெறுப்பு அடையவில்லை. அவள் 'மனோ நிலை அது என்று மகிழ்ந்தேன். என் எழுத்துக்கு அவள் உரம் ஊட்டினாள். அந்த வகையில் அவள் என் நினைவில் நல்ல மதிப்பைப் பெற்றாள். இலக்கியம் முக்கியம் அல்ல; வாழ்க்கைதான் முக்கியம். ஒரு பெண் குழந்தையைப் பெற்றவுடன் தன் கொள்கைகளை எல்லாம் காற்றில் விட்டுவிட்டாளே என்று நினைக்கும் பொழுதுதான் எனக்கு வருத்தம் உண்டாயிற்று. நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாகி விட்டது. அதற்காகவே வெளிநாடு போகத் துணிந்து விட்டாள். தன் கணவனைத் துண்டியிருக்கிறாள். நிச்சய மாக என் மனைவி தந்த பொம்மையின் வடிவத்தில்தான் அவள் மகள் வருவாள். அவள் கற்பனை எவ்வளவு பொருத்தமாக அமையப்போகிறது என்று நினைக்கும் பொழுது எனக்கு வியப்பாகவே இருந்தது. அந்தக் குழுந்தைக்கு என்ன பெயர் வைப்பது? உண்மையில் என் கற்பனையில் அழகிய உருவகம் இடம் பெறவில்லை. உருவகம் தான் பெண்ணுக்குப் பெயராக அமைகிறது. 'விடிவெள்ளி' என்ற பெயர் வைத்தால் நன்றாக இருக்கும். அந்தப் பெண்ணவாது லட்சியப் பெண் ணாக வாழட்டும் என்பது என் கற்பனை பெண்ணே நீ வாழ்க’ என்று கூறி என் வாழ்த்துரையைத் தெரிவித்தேன். ஞானம் தாஜ்மகால் படத்தைத்தான் பரிசாகக் கொண்டு தர வேண்டும் என்று சொன்னாள். அதுதான் அவளுக்குப் பிடித்து இருந்தது. 'ஏன், 'பெண்ணே நீ வாழ்க’ என்ற அட்டைப் படத்தை அழகுபடுத்திப் பெரி தாக்கித் தரலாமே என்றேன். அதை அவள் ஏற்றுக் கொள்ளவில்லை. 'நாலுபேர் நம்மைப் பார்த்துச் சிரிப்பார் கள் என்றாள்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/108&oldid=914507" இலிருந்து மீள்விக்கப்பட்டது