பக்கம்:வெறுந்தாள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ти. ё 15 கன்னக்குழிவு அழகு என்று சொல்லுவார்கள். அது அவனுக்கும் அழகாகத்தான் இருந்தது. 'இவர் யார்?' என்று கேட்டாள். 'நம் வட்டம் தான்' என்று கூறினேன். நாங்கள் ஒரு இலக்கிய வட்டம் ஒன்று துவக்கி இருந்தோம். அதில் வானம்பாடி பெரும்பங்கு எற்றான். அந்த வட்டம்தான் சரசுவதியை அங்கு அழைத்தது. அவள் சொன்னாளே அந்த அறிவுப் பசி, அதுதான் அவளை இந்த இடத்திற்கு இழுத்து வந்தது. - எங்கள் வட்டம் மிகச்சிறிய வட்டம்தான். இலக்கிய விமரிசனம் செய்வதில் நாங்கள் ஒன்று பட்டோம். அவ்வப் பொழுது நாங்கள் கூடி விவாதிப்போம். அதில் எங்களுக்கு ஒரு தனி இன்பம் இருந்தது, ஏன் வளர்ச்சியும் ஏற்பட்டது. அவன் புதுக்கவிதைப் பயித்தியம். 'நீங்கள் புதுக் கவிதையைப் பற்றி என்ன சொல்லு கிறீர்கள்?' என்று என்னைக் கேட்டாள். 'புது மாப்பிள்ளையைப் பற்றி நீ என்ன நினைக் கிறாய்?' என்று கேட்டேன். 'அவர் மிடுக்குத் தனி அழகு' என்றாள். “எதுவுமே புதுமை என்றால் அழகுதானே' என் றேன். - - 'இந்தப் புதுக் கவிதையில் ஏழைகளின் கண்ணிரைப் பற்றிப் பிரமாதப்படுத்துகிறீர்களே, அது எனக்குப் பிடிக்கவில்லை' என்றேன். 'இந்தச் சமுதாயத்தின் நோய் அது. அதைத்தானே கவிஞன் தொட முடியும்' என்றான் அவன். 'தொட்டால் என்ன செய்ய முடியும், நம் உணர்வு களை எழுப்பிவிடுவதால் அவர்களுக்கு வாழ்க்கை அளித்து விட முடியுமா?' என்று நான் மேலும் கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/16&oldid=914518" இலிருந்து மீள்விக்கப்பட்டது