பக்கம்:வெறுந்தாள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வெறுந்தாள் 'இது முதற்படி' என்றான் அவன். அதற்குள் உள்ளே இருந்து என் மனைவி சூடாகக் கொண்டு வந்து வைத்த காப்பி ஆறிக் கிடந்தது. அவள் பார்வை சரசுவதியின் மேல் விழுந்தது. நான் ஒரு பெண் ணோடு பேசுவதை அவளால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை என்பதை அவள் மறுபடியும் எங்கள் மீது கவனம் செலுத்தாததிலிருந்து தெரிந்து கொண்டேன். அவளைக் கூப்பிடவும் விரும்பவில்லை. அவள் வாழ்க்கையில் முழு அர்த்தம் இருப்பதை என்னால் உணர முடிந்தது. அவள் எல்லை நாற்புறத்துச் சுவர்கள். அவள் ஆட்சி அந்த வீட்டு அறைகள்; அவற்றைத் துப்புரவு செய்வது; வீட்டை அழகாக வைத்துக் கொள்வது; பெருக்குவது; கூட்டுவது; கழிப்பது. இந்தக் கணக்கில் அவள் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. அவளுக்கு என்னைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் கிடையாது. அவள் தாய் வீட்டில் அவள் அண்ணன்மார் சீட்டு ஆடுவதைப் பார்த்திருக்கிறாள். சில சமயம் குடியும் அங்குக் குடித்தனம் செய்வதைப் பார்த்திருக்கிறாள். அதை அவள் தவறாகவே கருதியது இல்லை. 'சீட்டு ஆடுவதிலே என்ன தவறு இருக்கிறது?” என்று கேட்டு இருக்கிறாள். 'அதில் நல்லதும் இல்லை; கெட்டதும் இல்லை” என்று நான் சொன்னேன். 'பொழுதுபோக்கு. உங்களைப் போல் இலக்கிய விமரிசனங்களைச் செய்து கொண்டு மண்டையைக் குழப்பிக் கொள்ளத் தேவை இல்லை' என்றாள். நான் சொன்னேன். 'அது என் தொழில். பத்திரிகை ஆசிரியர் பதவியை எப்பொழுது ஏற்றுக் கொண்டேனோ அப்பொழுதே இந்த விமரிசனம் என்னை விடாது' என்று சொன்னேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/17&oldid=914519" இலிருந்து மீள்விக்கப்பட்டது