பக்கம்:வெறுந்தாள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வெறுந்தாள் செய்ய முடியும். தொடர்ந்து எழுத முடியாது என்பதை உணர்ந்துதான் பேசாமல் பத்திரிகை ஆசிரியனாக மாறி விட்டேன். பத்திரிகை ஆசிரியன் ஆவது மிகவும் எளியது என்பதை உணர்ந்து கொண்டேன். பத்திரிகை ஆசிரியர் வேறு, எழுத்தாளன் வேறு என்பதை என்னால் அறிய முடிந்தது. ஒரு கதை எழுதி விட்டதாலேயே நான் ஒரு எழுத்தாளன் எப்படி ஆக முடியும். அதற்கப்புறம் பத்திரிகைத் தொழிலை ஏற்றுக்கொண்ட பிறகு இருக்கிற கற்பனையும் என்னைவிட்டு ஒடிவிட்டது. நிறைய கதை கள் வரும். அவற்றைப் படித்துப் படித்து என் மூளை மழுங்கிவிட்டது என்றுதான் கூறமுடியும். அந்த ஒரு கதைக்கு வேண்டிய அனுபவம் அவ்வளவு தான் என் வாழ்க்கையில் தீட்ட முடிந்தது. அதற்குமேல்? என் வாழ்க்கைப் பிரச்சனை சூழ்ந்து கொண் டது. தன் வாழ்க்கைப் பிரச்சனை மட்டும் எழுத்தாளனுக்குக் கதையாக முடியாது என்பதை உணர்ந்தேன். அது சில சமயம் ஆற்றலைத் தரலாம். அதுவே கதையாக அமை யாது. பிறர் பிரச்சனைகளை எடுத்தாளும் போதுதான் எழுத்தாளன் பிரகாசிக்கிறான். அந்த அனுபவம் எனக்கு ஏற்படவில்லை. அது அவள் மீது தவறு. நான் பத்திரிகை ஆசிரியன் என்பதாலேயே நான் ஒரு பிரபலஸ்தன் என்று கருதி விட்டாள். அதாவது அவள் எழுதும் கதைகள் எப்படி யாவது வெளி வர வேண்டும் என்ற ஆசை. அதற்காகத் தான் அவள் இந்த இலக்கிய வட்டத்தை ஆரம்பித்தாள். அவளுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட வில்லை. அந்த டாக்டர் அவளுக்குப் பிடிக்கவில்லை. நான் எப்படி அவசரப்பட்டு இந்தப் பத்திரிகைத் தொழிலைக் கட்டிக் கொண்டேனோ அதே போல அவளும் அவரைத் தன் ஹீரோவாக ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/19&oldid=914521" இலிருந்து மீள்விக்கப்பட்டது