பக்கம்:வெறுந்தாள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 21 என்று என்னால் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. சீட்டுக் கட்டுகள் குலுக்கிக் குலுக்கிப் போட்ட சீட்டுகள் மாறி மாறி வந்தன. ஆகா! ஊகா சபாஷ் வெற்றி இந்தக் குரல்தான் கேட்டிருக்கிறேன். இப்படித்தான் நான் படித்த கதைகள் இருந்தன. சே! இதுதான் இலக்கியம் என்றால் இதைவிட அந்தச் சீட்டுக் கட்டு ஆட்டமே மேல் என்று என்னை அறியாமல் எண்ணத் தொடங்கினேன். அந்த ஆறிய காப்பியைக் குடித்தோம். சரசுவதி அவள் சிறுகதைப் பயித்தியம். அவள் ஒரு சிறுகதையைப் படித்தாள். நான் எங்கள் பத்திரிகைகளில் ஒதுக்கிவிட்ட கதைகளை எங்கள் வீட்டில் குப்பையாக வைத்து இருந் தேன். அவள் அந்தக் கதைகளைப் படிப்பதில் தனி ஆர்வம் காட்டினாள். 'நீங்கள் தள்ளிவிடுகிற கதைகள்தான் எனக்குப் பிடிக்கும்' என்றாள். "σσότ? “ரசனை’’ "எப்படி?” 'விதவையின் பார்வை' 'புதுமை?” 'இல்லை' 'புனர் வாழ்வு?’’ 'ஆம் அதில்தான் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அத்தகைய கதைகளைத்தான் எனக்குப் படிக்கப் பிடிக்கும்' என்றாள். இந்தச் சிறு சிறு வாக்கியங்களுக்குப் பின்னால் அவள் நீண்ட வாக்கியம் அர்த்த புஷ்டியாக விளங்கியது. அவள் சொல்லுகிறாள். விதவைக்குத்தான் பிரச்சனை கள் புரியும். 'புனர் வாழ்வு' என்பது அவளுக்குத்தான் தெரியும் என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/22&oldid=914524" இலிருந்து மீள்விக்கப்பட்டது