பக்கம்:வெறுந்தாள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வெறுந்தாள் நூல்கள் நிறையக் கற்றிருக்கிறான். 'ஈன்றாள் பசி காண் பானாயினும் பழிவரும் செயலைச் செய்யாதே' என்று படித்திருக்கிறான். காந்தி அடிகளின் படம் அவன் தேர்வு எழுதும் அறையில் தொங்கவிடப்பட்டு இருந்தது. அவர் யாரையோ பார்த்துச் சிரிப்பது போல் இருந்தது. இவ்வளவு துன்பம் வந்தபோதும் அவர் முகத்தில் மட்டும் ஏன் சிரிப்புத் தவழ்கிறது. இடுக்கண் வருங்கால் நகுக' என்ற கூறிய வள்ளுவரைப் பார்த்து அவர் சிரிப்பது போல இருந்தது. அதற்குமேல் அந்தக் கதை என்னைக் கவரவில்லை. வாழ்க்கையின் துன்பச் சித்திரம் ஒரு கதையாகப் பட வில்லை. 'இதில் என்ன கதை இருக்கிறது' என்று வானம்பாடி குறுக்கிட்டான். அவன் இதையே புதுக் கவிதையில் சொன் னான். 'கண்ணிர் ஏன் உப்புக் கரிக்கிறது என்றால் வாழ்க்கை யில் இனிமை இல்லாததால் தான்' என்பான். இதுதான் புதுக் கவிதை என்பான். அவனைப் பார்த்தால் எனக்கு அதிகம் பிடிப்ப தில்லை. முதற் காரணம் அவன் வயதில் சிறியவன்; மற்றொன்று பொருத்தமில்லாத செய்திகளைச் சொல்லி அதைப் புதுக் கவிதை என்பான். விஷயம் இருக்காது. ஏதாவது குதர்க்கமாக எழுதி வைத்துவிட்டு அதைக் கவிதை என்பான். அங்கே என்ன பேசுவது என்று தெரியாமல் கொஞ்சம் நேரம் சும்மா இருந்தோம். டாக்டராக இருந்தால் சும்மா ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துப் புகை விடுவார். இந்த இலக்கிய விமரிசனங்கள் வெறும் நல்ல பழக்கங்களையே க்ற்றுக் கொடுத்துவிட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/31&oldid=914534" இலிருந்து மீள்விக்கப்பட்டது