பக்கம்:வெறுந்தாள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 33 'தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும்' என்ற கவிதை நூலைப் படித்தேன். அந்த உருவகம் எனக்கு நிரம்பவும் பிடித்து இருந்தது. தாஜ்மகால் படம் மாட்டப்பட்டு இருந்தது, அந்த டிக்கடையை அலங்கரித்தது. கவிஞன் அதைப் பார்க்கிறான். மிக அழகாக இருந்தது. கீழே ஒரு ரொட்டித் துண்டு கிடந்தது. அது அவனுக்குக் கிடைக்குமா என்று அவன் கண்கள் ஏங்கின. அது அவனுக்குக் கிடைத்தது. அதைத்தான் அவன் எடுத்துக் கொண்டான். இன்னும் பிரமாதமான கருத்துகள் அந்நூலில் இடம் பெற்று இருந்தன. இன்றைய வெய்யிலுக்கு நேற்றைய நிழல் பயன்படாது என்ற கருத்தும் இடம் பெற்று இருந்தது. உருவகம் என்றால் என்ன என்பதை இந்த நூலின் தலைப்பு அழகாக விளக்கியது. பழைய இலக்கியம் பார்க்கப் படிக்க ரசிக்கப் பயன்படுகிறதே தவிர இன்றைய பிரச்சனை களுக்குப் பயன்படவில்லை என்பதை நினைத்துப் பார்த்தேன். அந்த 'வெறும் தாள் கதையில் காந்தியின் படம் வருணனையில் இடம் பெற்று இருந்தது. அவர் சிரித்துக் கொண்டிருந்தார். எதற்காகச் சிரித்தார். இந்தப் பையன் வெறும் தாள் மடித்துக் கொடுத்ததைக் கண்டு இல்லை. அவர் பெயரைச் சொல்லி இன்றைய பிரச்சனைகளைத் தீர்க்க முயல்கிறார்களே அதைப் பார்த்துத்தான் சிரித்து இருக்க வேண்டும். ஒரு தாஜ்மகால்; படத்தையே பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தால் ரொட்டித் துண்டைப்பற்றி யார் நினைப்பது? இன்றைய பிரச்சனை தாஜ்மகால் படத்துக்குக் கண்ணாடி போடுவதல்ல; ரொட்டித் துண்டு களைப் பங்கிட்டுக் கொடுப்பது என்ற எண்ணம் ஒடியது. இந்த நினைவு அலைகள் அப்பொழுது எழவில்லை; அவர்கள் விட்டுப் பிரிந்த பின்தான் தோன்றின. அவள் ஒரு உருவகத்தைச் சொன்னாள். வானத்து நிலவைப் பற்றி இந்தப் புலவர்கள் அடிக்கடி சொல்வதைக் கேட்டிருக்கிறாயா? அதன் மாசுதான் உலகத்துக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/34&oldid=914538" இலிருந்து மீள்விக்கப்பட்டது