பக்கம்:வெறுந்தாள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 39 கதையாகப் பிரசுரிக்கக் கூடாது என்று எண்ணத் தொடங் கினேன். அதற்குள் என் வீட்டு ரியலிசம்' என்னைத் தட்டி எழுப்பினாள். 'இதோ பாரு! இனிமேல் அவள் நம்ம வீட்டுக்கு வரக்கூடாது', á á • * * g (Lissss 'அதுதான் அந்த சச்சு' "ஆமாம். அவள்தான்' அந்தப் பெயரை எங்கோ திரைப்பட உலகில் கேட்டு இருக்கிறேன். எழுத்துலகில் யார் அந்தச் சச்சு? எனக்கு விளங்கவில்லை. 'யார் அந்தச் சச்சு?' என்று தைரியமாகவே கேட்டேன். 'அதுதான், அந்த சரசுவதி, எப்பொழுதும் ஏடும் கையுமாக வருகிறாளே'. 'கலைமகள்; அப்படித்தான் இருப்பாள்' "எல்லோரும் கலைமகள் ஆகிவிட முடியுமா?” 'அப்படி ஒரு பத்திரிகை வருகிறதே தெரியுமா உனக்கு?” 'தெரியும். யாரோ சில பேர் படிக்கிறார்கள்.” 'ஏன் அதைப் பல பேர் படிக்கவில்லை?” 'கலையை ரசிப்பவர்கள் சில பேர்தான் இருக்க முடியும்'.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/40&oldid=914546" இலிருந்து மீள்விக்கப்பட்டது