பக்கம்:வெறுந்தாள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வெறுந்தாள் "அதைத்தான் யோசிக்கிறேன். ஒரு பத்திரிகை என்பது எழுத்தாளர்களை ஒட்டித்தான். நல்ல எழுத்தாளர் கள் எழுத முன் வராததால் தான் இந்தத் துணுக்குகளைக் கட்டிக் கொண்டு அழ வேண்டி இருக்கிறது'. 'அது இல்லை. அவர்கள் எழுதுவதற்கு நிறைய விஷயம் இல்லை. இதுதான் இந்த நாட்டுப் பஞ்சம்' "எழுத்துப் பஞ்சம்' என்ற பேச்சு எங்கள் ஆபீசில் கேட்டு இருக்கிறேன். 'விஷயம் பஞ்சம்' என்ற சொல்லை அவள் வாயால்தான் கேட்கிறேன். 'அது சரி. புது அம்சம் என்று சொல்லி எதைச் சேர்க்க நினைக்கிறீர்கள்?' 'அதற்குத்தான் இந்த இலக்கிய வட்டம் அவர்கள் தான் அதற்குக் குழு உறுப்பினர்கள். இனி இந்த நாட்டில் நடக்கும் கிளர்ச்சிகள், அரசியல் போக்குகள், திரைப் படங்கள், நாடகங்கள், வெளியிடப்படும் நாவல்கள் புதிய நூல்கள் இவற்றைப் பற்றி விமரிசனம் செய்வது'. "சச்சு எதற்கு?' 'அவள் சிறந்த விமரிசகி'. 'நானும் கேட்டுக் கொண்டிருந்தேன். அவள் தன் கணவனை விமரிசனம் செய்கிறாள். அது எனக்குப் பிடிக்கவில்லை'. அவள் ஏன் சரசுவதியை வெறுக்கிறாள் என்பதற்கு அப்பொழுதான் காரணம் தெரிந்தது. 'இலக்கியத்தை ரசிக்கலாம். விமரிக்கலாம் கணவனை ரசிக்கலாம் ஆனால் விமரிசிக்கக் கூடாது. இது அவள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி' என்றாள். "அது அவள் உரிமை” "அது அவ்வளவு பெருமை தருவது அல்ல.” 'படித்தவள்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/43&oldid=914550" இலிருந்து மீள்விக்கப்பட்டது