பக்கம்:வெறுந்தாள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வெறுந்தாள் பாரியாக இருந்தால் எந்த அடையாளமும் தெரியாது. சோபாக்கள்தான் அழகாக இருக்கும்; என்னைப் போல அரைப் பத்திரிகை ஆசிரியர் வீட்டில் பிரசுரமாகாத கதைகளும் அரைகுறையாக எழுதிப் போட்ட குப்பைகளும் தான் இருக்கும். பத்திரிகை ஆசிரியன் என்பதால் பரபரப்பும் வருவார் போவாரும் இருப்பார்கள். எழுத்தாளன் என்பதால் அதற்கு வேண்டிய தனிமையும் கிடைத்தது. நான் ஒரு காலத்தில் எழுத்தாளனாக இருந்தபோது என்னைப் பலர் கேள்விகள் கேட்டார்கள். ஆச்சரியமாக இருக்கும். நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள் என்று கேட் பார்கள். 'பேனாவினாதான் எழுதுகிறேன்' என்பேன். "அதைக் கேட்கவில்லை, எப்படி உங்களுக்கு எழுத வருகிறது?' என்பார்கள். 'வெறுந்தாள் என் முன்னால் இருக்கிறது. எழுதத் தொடங்குவேன். பிறகு எழுத்துத் தன்னால் வரும்” என்பேன். இப்படி அவசியமில்லாத கேள்விகள் எல்லாம் கேட் பார்கள். 'இந்தப் பாத்திரங்கள் எல்லாம் உண்மையான பாத் திரங்களா?' இப்படி ஒரு கேள்வி. 'உண்மையைச் சொல்லுகிற பாத்திரங்கள்தான்' என்பேன். வேறு என்ன சொல்ல முடியும்? 'சம்பவங்கள்?' 'அதுதான் கற்பனை' என்று பத்திரிகைகளில் குறிப் பிடுகிறோமே' என்பேன். 'இந்தக் கற்பனை எப்படி உதயமாகிறது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/49&oldid=914556" இலிருந்து மீள்விக்கப்பட்டது