பக்கம்:வெறுந்தாள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

qп. ё 49 'அதற்கு என்னால் அப்பொழுது பதில் சொல்ல முடியவில்லை. நான் அரை குறை எழுத்தாளன் தானே? நான் எப்படிப் பதில் சொல்ல முடியும்? "எழுதுவதற்கு எங்காவது போய் உட்கார்ந்து விடு வீர்களா?” "உட்கார்ந்துதான் எழுத முடியும்' 'இல்லை ஊட்டி, கொடைக்கானல்'. 'அப்புறம் டியூட்டி என்ன ஆவது?” 'இல்லை அப்படித்தான் சிலர் எழுதியதாகச் சொல்லு கிறார்கள். இரண்டு மூன்று மாதம் ஒய்வு எடுத்துக்கொண்டு எங்காவது போய் உட்கார்ந்து எழுதுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்'. 'இருந்த இடத்திலேயே எழுதலாமே” 'இல்லை அடிக்கடி வந்து தொந்தரவுப்படுத்திக் கொண்டிருக்க மாட்டார்களா?” "தொந்தரவுகளை எழுதுவதுதானே கதை! பிறர்படும் துன்பங்களை எழுதும் எழுத்தாளன் ஏன் ஒடித் தனிமை யைத் தேடவேண்டும்'. 'இல்லை தனியாக ஒரு கதையை சிருஷ்டி செய் கிறார்களே எப்படி முடிகிறது?’’ அதற்கும் என்னால் பதில் சொல்ல முடிவதில்லை. அதே பழைய கேள்வியைக் கேட்டுக்கொண்டுதான் அன்று சரசுவதி பேச்சைத் தொடங்கினாள். 'சிருஷ்டி என்பது தனிமையில் படைப்பது அல்ல' என்றேன். அவள் சிரித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/50&oldid=914558" இலிருந்து மீள்விக்கப்பட்டது