பக்கம்:வெறுந்தாள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 51 புதுக் கவிதைக்காரர்கள் புகுத்த மாட்டோம்; என்னால் அதை ஒப்புக்கொள்ள முடியவில்லை.” 'நீங்கள் காயமே இது பொய்யடா என்பதால் இது பொய்யாவதில்லை. அது மெய் என்று சொல்லி விட்டால் உடனே அது மெய் ஆகிவிடுவது இல்லை. இதுதான் உண்மை. மனிதன் கொள்ளும் உணர்வுதான் அதற்குக் காரணம். அந்த நிலையில் அது படுகிறது; அதனால் அந்த உணர்வுதான் அடிப்படையே தவிரச் செய்தி அல்ல. அதே போலத்தான் எந்தச் செய்தியும்” என்றேன். 'அதைச் சொல்லவில்லை. அத்தகைய சித்தாந்தங்கள் இந்த நாட்டில் தோன்றி மனிதனின் சுய சிந்தனையையும் செயலாற்றலையும் குறைத்துவிட்டிருக்கிறது. அதை எதிர்ப் பதுதான் இன்றைய புதுக் கவிதையின் சித்தாந்தம்' என்று அவன் தன் கருத்தைக் கூறினான். சரசு இந்த வாதத்தில் அவள் ஈடுபடவில்லை. 'ஆசை அன்பு, பாசம்' என்ற கதையில் அவள் ஆழ்ந்து கிடந்தாள். தன் கணவன் தன் மீது கொண்டது ஆசையா அன்பா பாசமா என்று தெரியாமல் அவள் திகைத்துக் கொண் டிருந்தாள். ஆசை முதற்படி, அன்பு இரண்டாம்படி, பாசம் மூன்றாவது நிலை என்று அந்தக் கதை அவளுக்கு உணர்த்தியது. இவ்வளவு அழகாக இந்தத் தத்துவத்தை அக்கதை உணர்த்தியதைப் படித்துப் படித்து வியந்தாள். தன் கணவன் முதற்படியில் இருக்கிறான் என்பதை அவள் உணரத் தொடங்கினாள். தான் இரண்டாவது படியில் இருப்பது போன்ற உணர்வு அவளுக்கு இருந்தது. மூன்றாவது படியில்தான் வித்தியாசம் ஏற்படுகிறது. தன் பாசம் எங்கோ சென்றுவிட்டது போன்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/52&oldid=914560" இலிருந்து மீள்விக்கப்பட்டது