பக்கம்:வெறுந்தாள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 59 அவசியமில்லாமல் ஏன் கவலைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்தச் சுதா எதிர்காலத்தில் தன் வாழ்க்கை என்ன ஆகப் போகிறதோ என்ற அச்சத்தால் தன்னை அழித்துக் கொண்டான். அதுதானே வெறுந்தாள். வாழ்க்கை அவனுக்கு வெறுந்தாள் ஆகிவிட்டது வெறுந் தாள். வாழ்க்கை அவனுக்கு வெறுந்தாள் ஆகிவிட்டது. அதில் என்ன எழுதுவது என்று தெரியாமல் திகைத்தான். மற்றொரு கதை. அவள் ஒர் யுவதி, நல்ல வயது; அவளுக்குக் கலியாணமே ஆகவில்லை; அதுவே அவ ளுக்குக் கவலையாகிவிட்டது; ஆபீஸில் பழகினாள். எத்தனையோ வாய்ப்புகள் கிடைத்தன. ஆண்களோடு சிரித்துக் கூடப் பேசமாட்டாள். அது பெரிய பாவமென்று நினைப்பாள். அதாவது அப்பா கல்யாணம் பண்ணி வைக்கிற ஆம்பளையோடுதான் பேசுவாள். வேறு யாரோடும் பேசமாட்டாள். மூஞ்சியை 'உம்' என்று வைத்துக் கொள்வாள். எல்லாரும் அவளை 'உம்மணா மூஞ்சி' என்று கூப்பிட்டார்கள். அப்புறம் அவள் முகம் களையிழந்து விட்டது. இருபது வயதில் எப்படி நாற்பதாகக் காட்சியளிக்க முடியும் என்பதற்கு அவள் ஒரு எடுத்துக் காட்டாக விளங்கினாள். பிறகு அவள் அப்பா கொண்டு வந்த வரன்களெல்லாம் அவள் மூஞ்சி சரியாக இல்லை, அவள் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை, அவள் ஒரு 'சோகை' என்று பெயர் வைத்துவிட்டுப் போய்விட்டார்கள். சில காலம் சென்றுவிட்டது. இன்னும் அவள் ஆபீசுக்குப் போய்க் கொண்டுதான் இருக்கிறாள். தன்னோடு வேலை செய்கிறவர்கள் எல்லாம். ஏதோ சந்தோஷமாக இருப்பதைப் போலக் காணப்பட்டது. தான்மட்டும் தனித்து விடப் பட்டதைப் போலிருந்தது. அவள் வலிய ஆண்களிடம் சென்று சிரிக்க ஆரம்பித்தாள். அவர்கள் அவளைப் பார்த்துச் சிரித்தார்கள். 'சிரிப்பு' என்பது அந்தக் கதையின் தலைப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/60&oldid=914569" இலிருந்து மீள்விக்கப்பட்டது