பக்கம்:வெறுந்தாள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வெறுந்தாள் காலட்சேபங்களில் இராமசந்திர மூர்த்தி என்ற பெயரைத் தூக்கத்தில் உளறிக் கொட்டினாள். அந்தப் பெயரை அவள் காலட்சேபத்தில் கேட்டு வைத்திருக்கிறாள். அவள் நெஞ்சில் யாரோ குடிபுகுந்துவிட்டதை அவர் கண்டு பிடித்துவிட்டார். அவள் கற்பில் தவறிவிட்டாள் என்பதை எளிதில் கண்டுபிடித்து விட்டார். 'கற்புடைப் பெண்டிர் நெஞ்சில் பிற ஆடவர் புகார் என்று எங்கோ படித்து இருக்கிறார். காலட்சேபத்திலும் இவர் பல முறை சொல்லி இருக்கிறார் அவ்வளவு தான்; அவளைக் கல்லாகப் போ' என்று சாபம் கொடுத்தார். அது பலிக்கவில்லை. அது எப்படி முடியும். 'இந்த இருபதாம் நூற்றாண்டு சாப விமோசன காலமாயிற்றே பெண்களுக்கு சாப விமோசனம். பிறக்கும் புது யுகம் பிறந்துவிட்டது. அவர் சாபம் பலிக்கவில்லை. 'நீ மண்ணாகப் போ' என்று சொன்னார். அவள் கல்லாகவும் மாறவில்லை; மண்ணாகவும் போகவில்லை. அதிலே இருந்து அவர் அவளிடம் நெருங்குவ தில்லை. அவளுக்கு அதுக்கப்புறம் தான் சந்தோஷம் என்பது என்ன என்று தெரிந்தது. இப்படி ஒரு கதை படித்த நினைவு வந்தது. ஏன் அந்தக் கதை நினைவுக்கு வந்தது என்று தெரியவில்லை. 'விமோசனம்' என்ற தலைப்பு அந்தக் கதைக்கு பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. 'இந்த மாதிரிக் கதைகள் இப்பொழுது நிறைய வந்து கொண்டிருக்கின்றன.' 'அத்ைதான் சார் நாங்களும் எங்கள் புதுக் கவிதை யில் சொல்லுகிறோம்; சொல்லிக் கொண்டு வருகிறோம்'. என்று ஆரம்பித்தார் புதுக் கவிதை வாதி வானம்பாடி. 'இலக்கியம் பழைய ஒழுக்கத் தனி மனிதப் பிரச்சனைகளைப் பேசுவது; சமுதாய வளர்ச்சிக்குத் தடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/63&oldid=914572" இலிருந்து மீள்விக்கப்பட்டது