பக்கம்:வெறுந்தாள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வெறுந்தாள் சம்பிரதாயச் சடங்குகளுக்கு அழைக்க வருவார்கள். அவர் களைப் பாய் போட்டுத் தான் உட்கார வைப்பாள். அவர்கள் குங்குமச் சிமிழ் கையோடு கொண்டு வந்து வைப்பார்கள். இவளும் போகும் பொழுது அவர்களுக்கு நெற்றியில் இட்டுக் கொள்ளச்சொல்லிக் குங்குமம் கொண்டு வந்து வைப்பாள். 'போயிட்டு வர்ரோம்' என்ற குரல்தான் அதிகமாகக் கேட்கும். திரும்ப, 'வந்து விடுங்கள் வராமல் இருந்துவிடப் போகிறீர்கள்' என்ற குரல்கள் தாம் கேட்கும். 'இப்பொழுது மொழி விலக்கிவிட்டோம். அது ஒரே பேஜார். அவர்களுக்கும் தொல்லை. இதெல்லாம் கவனத் தில் வைத்துக் கொண்டு தான் அதை விலக்கிவிட்டோம்.' இந்த மாதிரிப் பேச்சுகள் வரும். அங்கே கூடச் சீர்திருத்தம் கால் கொள்வதைக் கண்டு நான் ஆச்சரியப்படுவது உண்டு. நான் உள்ளே சென்றேன். 'டாக்டர்; அவர்தான் சரசுவதியின் கணவர்' என்றேன். 'நல்லா இருக்கிறாரே' என்று தன் அபிப்பிராயத்தை வெளியிட்டாள். அதாவது விதவை என்றால் அவளுக்குக் கிடைப்பது ஒட்டை ஒடைசல் செம்பு பித்தளைப் பாத்திரம் அது மாதிரி ஏதாவது இருக்கும் என்று நினைத்தாள். அதுவும் அவள் வாயாலேயே வெளிப்பட்டுவிட்டது. "அவருக்கு என்ன ஒட்டை மனுஷன் 'டிப் டாப்பா' நல்லா இருக்கிறார்' என்று அவள் அவரைப்பற்றி விமரிசித் தாள். 'அப்படியானால் வருகிறேன்” என்று அவளும் வந்து உட்கார்ந்து விட்டாள். பொதுவாக யாரும் இல்லாத சமயத்தில் நான் தனியாக இருக்கும் பொழுதுதான் அந்த அறையை எட்டிப் பார்ப்பாள். என் அறை ஒரே குப்பையாக இருக்கும்; தபால்களைக் கிழித்துப் போட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/65&oldid=914574" இலிருந்து மீள்விக்கப்பட்டது