பக்கம்:வெறுந்தாள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Т.п. ? 65 இருப்பேன். ஆபீசில் வரும் கடிதங்களை அங்குப் படிக்க நேரம் இல்லாமல் வீட்டுக்குக் கொண்டு வந்து படிப்பேன். வீட்டில் வரும் கடிதங்களை வீட்டில் நேரமில்லாமல் ஆபீசில் படிப்பேன். அன்று அவள் குடும்பப் பெண் என்ற கூடாரத்திலே இருந்து சமுகப்பெண் என்ற பரந்த வெளியில் அடி எடுத்து வைத்தது போன்ற உணர்வு எனக்குப்பட்டது. இது வரை உற்றார் உறவினர் பெற்றார் பெறாதவர் என்ற இந்தச் சுற்றத்தைத்தான் அவள் கண்டிருக்கிறாள். இதைப் போல இலக்கியவாதிகள் அறிஞர்கள் இடையே அவளுக்குப் பேசிப் பழக்கம் இல்லை. டாக்டர் என்றால் அவர் ஒரு மருத்துவர் மருந்து கொடுத்து விட்டுக் காசு வாங்குபவர் என்று மட்டும்தான் நினைத்து வந்தாள். அவருக்கும் ஒரு சமூகம், நண்பர்கள் இருக்கிறார்கள் இருப்பார்கள் என்பதை அவள் எப்படி அறிய முடியும். எப்படியோ அவளும் அன்று எங்கள் பேச்சில் கலக்காவிட்டாலும் அந்த வட்டத்தில் அவளும் ஒரு வட்டமாக அமைந்தாள். 'இவள்தான் என் மனைவி' என்று அறிமுகப் படுத்தினேன். 'நீங்கள் சொல்லித்தான் எங்களுக்குத் தெரிய வேண்டுமா?' என்று சொல்லிச் சிரித்தாள் சரசுவதி. 'இல்லை, மரபு; சம்பிரதாயப்படி அறிமுகம் செய் தேன்' என்றேன். 'அவருக்குத் தெரியாது; எனக்குத் தெரியும்' என் றாள். "வானம்பாடி குனிந்த தலையை நிமிர்த்தவில்லை. அது அவன் பழக்கமாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/66&oldid=914575" இலிருந்து மீள்விக்கப்பட்டது