பக்கம்:வெறுந்தாள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 67 அப்பொழுதுதான் தெரிந்தது. ஒழுக்கம் அடிப்படை, அதை ஒரு பிரச்சனையாக ஆக்குபவர்கள் இலக்கியவாதிகள் என்பது அவர் வாதம்; அதை வேண்டாம். என்று சொல்ல வில்லை. அதையே எழுதிக் கொண்டு இருந்தால் என்ன பயன்? என்று கேட்டார். கலை சிறிது நேரம் ஒய்வு எடுத்துக் கொண்டது. 'ரியலிசம் கொஞ்சம் நேரம் பேச இடம் கொடுத்தேன். 'இன்னும் பூவும் பிஞ்சும் ஒன்றும் இல்லையா? என்ற கேள்வியைக் கேட்டாள். இதுதான் தொடக்கக் கேள்வி. அதாவது அவள் அகராதியில் திருமணமானவர்களை அப்படித்தான் அவள் விசாரித்துப் பழக்கம். 'ஒன்றும் இல்லை. அவசரப் படவில்லை” என்று சிரித்துக் கொண்டே பேசினார். 'குடும்பக் கட்டுப்பாடு போல் இருக்கிறது” என்று சொன்னாள். அதாவது என் மனைவி குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டாள். அதைச் சொல்லாமல் சொல்லிக் காட்டி விட்டாள். என் பிள்ளைகளைப் பற்றி இதற்கு முன் உங் களிடம் சொல்லவில்லை; சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. என் மனைவியின் சொற்படி நடக்க வேண்டியவன்; அதனால் அவர்களை கான்வென்டில் படிக்க வைத்தேன். எல்லாம் ஐந்து, மூன்று, ஒன்று அதற்கப்புறம் அவள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டாள். அதை எல் லாருக்கும் அவள் பிரச்சாரம் செய்வதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறாள். 'இப்ப இருக்கிற விலைவாசிக்கு அதிகம் பெற்றுக் கொள்ளக் கூடாது' இது அவள் வாழ்க்கைச் சித்தாந்தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/68&oldid=914577" இலிருந்து மீள்விக்கப்பட்டது