பக்கம்:வெறுந்தாள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வெறுந்தாள் அதனால்தான் என்ன குடும்பக் கட்டுப்பாடா' என்ற கேள்வியைக் கேட்டுவிட்டாள். அவளுக்கு ஒரு ஆச்சரியம் அதாவது விதவைக்கு குழந்தை பிறக்குமா என்பதுதான் அவளுக்கு ஆச்சரியம். விதவைக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதை முதலில் அவளால் நம்ப முடியாது. அடுத்தது அவளுக்குக் குழந்தை பிறக்கும்; பிறந் தால் அவள் நிலை எப்படி உயரும் என்பதைக் காண ஆசை. அடுத்தது 'நீங்கள் இருந்து சாப்பிட்டுப் போக வேண்டும்'. இவ்வளவுதான் அவளால் பேச முடிந்தது. 'அதற்கு என்ன இன்னொரு நாளைக்கு வரு கிறோம்.” அது அவர்கள் தந்த சம்பிரதாயமான பதில். அதற்குமேல் அவளால் எங்களோடு இருக்க முடிய வில்லை. அதற்குள் வேலைக்காரி வந்து அவளைக் காப்பாற்றி னாள் 'பால் எங்கேம்மா வச்சிங்க' என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே வந்து அழைத்தாள். 'இதோ வந்துவிட்டேன்' என்று சொல்லிக் கொண் டே வெளியேறினாள். எங்களுக்கு உட்காரத் தாராளமாக இடம் கொடுத்ததைப் போன்ற உணர்வு எழுந்தது. அப்புறம்தான் எனக்கும் கொஞ்சம் தாராளமாக இருக்க முடிந்தது. அவரே பேசத் தொடங்கினார். 'இது ஒரு பெரிய 'நியூசன்சாகப் போய்விட்டது. ஒவ்வொருவரும் குழந்தை எங்கே என்று கேட்கிறார்கள்.” 'குழந்தை இல்லாமல் சந்தோஷமாக இருக்கமுடியாது என்று மனித மனம் நினைக்கிறது. அப்படிப் பழகி விட்டோம். அதுக்குத்தான் நமக்குச் சமூக உணர்வு ஏற்பட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/69&oldid=914578" இலிருந்து மீள்விக்கப்பட்டது