பக்கம்:வெறுந்தாள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வெறுந்தாள் சேர்த்து அவள் அதைக் காதல் என்று தானே சொன்னாள். அவள் அப்படிச் சொல்லவில்லை. உறவு என்றுதான் சொல்வாள். கணவன் மனைவியருக்குள் உறவு இருக்கிறது. ஆனால் அதைக் காதல் என்று கூற முடியாது. மக்களிடத்திலே கொள்வது காதல்; 'கடந்த ஞானியரும் கடப்பரோ மக்கள் மேல் காதல்’ என்று யாரோ எங்கோ பாடி இருக்கிறார்கள். தசரதன் கைகேயிடத்துக் கொண்டது உறவு; மகனிடத்தில் கொண்டது காதல்; இராமனைப் பிரிந்துவிட்டு அவனால் வாழ முடியவில்லை. பாசம் என்பது தாயிடத்தில்தான் ஏற்படுகிறது. அன்புமனைவி என்றுதான் கூறுகிறார்கள். பாசமுள்ள மனைவி என்று கூறுவது இல்லை. தாய்ப்பாசம்’ என்றுதான் கூறுகிறார்கள். அதனால் பெண் பாசம் என்ற நிலையை மகனிடத்தில் தான் காண முடிகிறது. கணவனிடத்தில் காண முடிவதில்லை. அவள் தான் இரண்டாவது நிலையில்தான் இருப்பதாகச் சொன்னாளே தவிர மூன்றாவது நிலையை எட்டிப் பிடித்ததாகக் கூறவில்லை. அவளுக்கு என்னிடம் பாசம் இருந்தது என்பதைக் காண முடிந்தது. அது அவள் என் சமூகக் கொள்கையில் கொண்டிருந்த ஈடுபாடு என்றுதான் நினைக்கிறேன். ஆசையையும் அன்பையையும் தன் கணவனுக்குத் தந்துவிட்டாள். என்றுதான் கூறமுடியும். அதே போலத்தான் நான் என் மனைவியிடம் ஆசை வைத்திருக்கிறேன். அன்பும் கொண்டு இருக்கிறேன். 'பாசம்” என்பது முழுமையாக வைக்க முடியவில்லை. அவளும் தன் குழந்தைகள் மீதுதான் அந்தப் பாசத்தைக் காட்டுகிறாள். என்னோடு உறவு என்ற எல்லைக்குள் நின்று இந்த உலகத்தைப் பார்க்கிறாள். அந்தச் சின்ன உலகத்தில் இந்த மூன்று நிலைகளையும் காண்கிறாள். இந்த மூன்றாவது நிலையை நான் வெளியே காண்கிறேன். சரசுவதியும் என் னோடு சேர்ந்து அவள் பாசத்தை இலக்கியப் படைப்பில் செலுத்துகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/73&oldid=914583" இலிருந்து மீள்விக்கப்பட்டது