பக்கம்:வெறுந்தாள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வெறுந்தாள் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? இதைத்தான் முதலில் தொடங்கினேன். அவளும் எனக்கு மனம் சரியாக இல்லை என்று கூறினாள். அவள் வாழ்க்கையின் அர்த்தத்தை என்னிடம் காண முயற்சித்தாள், நான் அவளிடம் காண முயல்கிறேன். இருவரும் அதன் விடையை இந்தச் சமு தாயத்தைப் பார்த்துக் கேட்கிறோம். அது வெறுந்தாளைக் காட்டுகிறது. 'வெறுந்தாள் என்ன விடைத்தாள் தான் திரட்டுமே அது வினாத்தாளுக்கு விடைத்தாள் ஆகுமேயன்றிப் பசித் தாளுக்கு உதவுமா என்ற கேள்வியைத்தான் நானும் கேட்கும் நிலையில் இருக்கிறேன். இந்த நாட்டு மக்களின் 'பசி' என்ன? அந்த வினாவுக்கு நாங்கள் விடை காண முயன்றோம், அதைத் தான் விமரிசனம் என்று அழைத் தோம்! இலக்கிய விமரிசனம் என்ற தலைப்பை அதற்குத் தந்தோம். இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன? வாழ்வுப் பிரச்சனைக்கு விடை என்ன? இந்த வினாக்களுக்குத் தான் பதில் தேடுகிறோம். அவள் என்னிடத்தில் எழுத்து இருக்கிறது என்று நினைக்கிறாள். பரிசு பெற்ற கதை; அதுதான் என் முதல் நாவல். அதைப் படித்துப் பார்த்தாள். அதற்கப்புறம் தான் அவள் என்னை மதிக்கத் தொடங்கினாள்;. என்னைச் சமுதாய எழுத்தாளன் என மதிப்பிடத் தொடங்கினாள். நான் பத்திரிகை ஆசிரியனாகப் பணி செய்வதை அவள் ஒப்புக் கொள்ளவில்லை. அதை யார் வேண்டு மானாலும் செய்யலாம். நீங்கள் விமரிசனம் செய்ய வேண்டும் என்றாள். நான் எழுத வேண்டும் என்று சொல் லாமல் விமரிசனம் என்ற தலைப்பில் ஒரு பத்திரிகை தொடங்க வேண்டும் என்று கூறுகிறாள். 'நான் உங்களோடு பழகுவது ஒரு பத்திரிகை ஆசிரியன் என்ற முறையில் அல்ல; நான் ஒரு ரசிகை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/75&oldid=914585" இலிருந்து மீள்விக்கப்பட்டது