பக்கம்:வெறுந்தாள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வெறுந்தாள் முடியவில்லை. படிக்க முடியாதவர்கள் எல்லாம் படிக்க வருகிறார்கள். ஏன்? படித்தால் முன்னுக்கு வரலாம் என்று. எப்படியோ இந்தக் கருத்து நாட்டில் பரவிவிட்டது. அதை இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் வியப் பாக இருக்கிறது. - பல்கலைக் கழகப் பட்ட விழாக்களில் படிக்கப்படும் பேச்சுரை என்ன? கல்வியின் பெருமையைக் கூறுகிறது. ஒழுக்கத்தின் சீலத்தைப் பற்றிப் பேசுகிறது. அதனால் வேலை கிடைக்கும் என்பதை மட்டும் கூற மறுத்து விடுகிறது. இனிமேல் பட்டங்களைப் பின்னால் போட்டுக் கொள்ள இளைஞர்கள் வெட்கப்படும் நாள் தூரத்தில் இல்லை என்ற எண்ணம் எப்படியோ எழுந்துவிட்டது. வேலை தர இயலாத தாள். அது எதற்குப் பயன்படும். அழகாக அச்சிடப்பட்டுள்ளது. வாழ்க்கையை அழகு படுத்தப் பயன்படலாம். போட்டோக்கள் எடுக்கலாம். 'கல்வி அழகே அழகு என்று அதை வைத்து அழகு பார்க்கலாம். ஆனால் அது அடுப்பு எரிக்கவும் பயன்படாது என்ற உணர்வு இந்த நாட்டில் எழத் தொடங்கிவிட்டது; 'பத்து வருஷமா! பன்னிரண்டு வருஷமா! பருவத் தேர்வா! முழுத் தேர்வா! இந்த ஆராய்ச்சியில் தான் மண்டையை உருட்டிக் கொள்கிறார்கள் தவிர படித்த பிறகு அவர்களுக்கு வாழ்க்கை என்ன என்று யார் சிந்திக்கிறார்கள்? ஏன் சிந்திப்பதில்லை. இந்த எண்ணங்களை அந்த 'வெறுந்தாள்' எழுப்பியது. இன்று பல திரைப்படங்கள் விமரிசிக்கப் படுகின்றன. இலக்கியங்களுக்கு விமரிசனம் இல்லை. திரைப்பட விமரிசனம் எதைச் சுற்றிச் சுழல்கிறது? நடிப்பு, ஒலி, ஒளி, டைரடக்டர்; கதை என்று வரும்பொழுது கைவிரிப்பு; விட்டு விடுகிறார்கள். 'கதை என்றால் என்ன? வாழ்வின் விமரிசனம் தான் கதை. பிரச்சனைகளுக்கு விடைதான். அதை யாராலும் சொல்ல முடிவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/77&oldid=914587" இலிருந்து மீள்விக்கப்பட்டது