பக்கம்:வெறுந்தாள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. சீ 79 இலக்கியம் நோயைக் காட்டுகிறது. அதோடு நிற்பதில்லை, ஆரோக்கியமாக வாழ வழிவகையும் செய்கிறது. இதுவரை தனி மனிதன் எப்படி ஆரோக்கியமாக வாழ்வது என் பதற்குத் தான் பதில் சொல்லி வந்தது. அதைத்தான் அவர் "Too much morality என்று மேற் போக்காகக் குறிப்பிட்டார். சமுதாய நலனைப் பற்றி எண்ண வேண்டும் என்பதுதான் அவர் சுட்டிக் கூறியதன் கருத்து. சமுதாயத்தில் நொண்டி, முடம், கூன் எல்லாரும் தான் வாழ்கிறார்கள். அதனால் அவர்களை ஒதுக்க முடியுமா! வெறும் தனிமனிதரின் குறைகளைச் சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா? சமுதாய உணர்வு பெறுவதில் தான் எங்கள் இலக்கிய வட்டம் செயல்படத் தொடங்கிவிட்டது என்பதை உணரத் தொடங்கினேன். இந்த அடிப்படையில் தான் சரசுவதியும் தன் கணவனை விமரிசனம் செய்தாள். ஏதாவது எழுதிப் பரிசு பெறும் எழுத்தாளனை அவள் மதிக்க மறுந்து விட்டாள். அதில் சமுதாய நலனைத்தான் எதிர்பார்க்கிறாள். நோயாளியின் நோயைக் குணப்படுத்தட்டும்; அதற்கு வாங்கும் கட்டணத்தைப் பற்றி ஏன் பேசுகிறாய் என்ற கேள்வியின் அர்த்தம் அது தான். கதை எழுதிய உடனே அது அழகாக இருக்க வேண்டும்; பரிசு பெறவேண்டும் என்று நினைப்பது தவறு என்பது அவள் கருத்து. பரிசு பெற்றவுடன் எழுத்தாளனின் தொண்டு மங்கி விடுகிறது. டாக்டர் Fees ஐப் பற்றிக் கவலைப் படக்கூடாது; நோயைத் தீர்ப்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்பது அவள் செய்த விமரிசனம். தன் கணவனுக்குச் சமுதாய உணர்வு இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். அவள் லட்சியப் பெண். அவர் அவளைக் குடும்பப் பெண்ணாக ஆக்க முயற்சி செய்கிறார். வாழ்வின் சுக போகங்கள் என்ற மாயையைக்காட்டி அவள் பார்வையை மட்டம் தட்டப் பார்க்கிறார். அவள் சமுதாயத்திடம் கொண்ட பாசம் மகத்தானது. உயர்ந்த கருத்துகளால் இந்த நாட்டிலே ஒரு புதிய எழுச்சி உண்டாக வேண்டும் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/80&oldid=914591" இலிருந்து மீள்விக்கப்பட்டது